உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி

திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று உண்டியல் எண்ணும் பணி துணை ஆணையர் செல்வி தலைமையில் நடந்தது.


அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் திவ்யபாரதி, ஜென்னி, ஆய்வர்கள் அய்யனார், இசக்கி செல்வம், கண்காணிப்பாளர் பாஸ்கரன் ,மதுரை அன்னபூரணி சேவா சங்கத்தினர், கோயில் ஊழியர்கள் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 19 லட்சத்து 49 ஆயிரத்து 630 ரூபாய் ரொக்கமும், 33.400 கிராம் தங்கம், 74.500 கிராம் வெள்ளியும் , வெளிநாட்டு கரன்சிகள் 11ம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !