உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆவணி மாத மகா ருத்ராபிஷேகம்

 சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆவணி மாத மகா ருத்ராபிஷேகம்

 சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று ஆவணி மாத மகா ருத்ரா மகாபிஷேகம் நடைபெற்றது.


பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜா் கோவிலில், சித்சபையில் உள்ள மூலவர் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி ,மார்கழி, மாசி என, ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறும்.


மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி திருமஞ்சன தரிசனத்தின்போது, ஆயிரங்கால் மண்டப முகப்பிலும், மற்ற 4 மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும். ஆவணி மாத மகாபிஷேகம், அதிருத்ர மகாபிஷேகமாக சித்சபை முன்பு உள்ள கனகசபையில் நேற்று மாலை 6:30 மணிக்கு தொடங்கியது. சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிகளுக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர் பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவைகளால் குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. மகாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று காலை 11:00 மணிக்கு மகா ருத்ர யாகம் நடந்தது. அதிருத்ர மகா ஜபம் கடந்த 24ம் தேதி துவங்கியது. மகாபிஷேக நாளான நேற்று காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு ஏககால லட்சார்ச்சனை, பின்னர் யாகசாலையில் கடஸ்தாபனம் செய்யப்பட்டு அர்ச்சனை மற்றும் அதிருத்ர ஜப பாராயணம் நடைபெற்றது. மாலை வடுக பூஜை, கன்யா பூஜை, சுகாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, கஜ பூஜைகளை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பாடாகி கனகசபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாருத்ர மகாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !