உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்

தேவகோட்டை; தேவகோட்டை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆடி விழா நடந்தது. வேள்வி பூஜை, கொடியேற்றம் நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பெண்கள் அக்னிச்சட்டிகளை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிப்பட்டனர். நேற்று 5004பேர் பங்கேற்ற கஞ்சி கலய ஊர்வலத்தை முன்னாள் கப்பறபடை அதிகாரி துரை கருணாநிதி தொடங்கி வைத்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கஞ்சி கலய ஊர்வலம் சித்தர் பீடத்தை அடைந்தது. தொடர்ந்து பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப் பெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !