உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் ஆவணி அவிட்டம்; மந்திரம் ஜெபித்து புதிய பூணூல் அணிந்து வழிபாடு

கோவையில் ஆவணி அவிட்டம்; மந்திரம் ஜெபித்து புதிய பூணூல் அணிந்து வழிபாடு

கோவை; ஆவணி அவிட்டம் என்பது தமிழ் மாதம் ஆவணி மாதத்தில் பௌர்ணமி மற்றும் அவிட்டம் நட்சத்திரத்தில் வரும் நாளை ஆவணி அவிட்டம் என்று  அழைக்கப்படுகிறது அன்றைய தினம் பிராமண சமுதாயம் மற்றும் செட்டியார் சமூகம் உட்பட பலரும்  கடந்த ஆண்டு போடப்பட்ட பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூல் அணிவது வழக்கமாக உள்ளது சம்ஸ்கிருத மொழியில் இதற்கு உபாகர்மா என்று பொருளாகும் இதற்கான அர்த்தம் ஆரம்பம் அல்லது தொடக்கம் என்று சொல்லப்படுகிறது . ஆன்மீக கல்வியும் வேத படிப்பும் இந்த நாளில் தொடங்குவது வழக்கமாக உள்ளது ரிஷி தர்ப்பணம் வேதங்களை உலகுக்கு வழங்கிய காண்டரிஷிகளுக்கு நன்றி   வகையிலும் கடந்த  வ செ ய்த தவறுகளுக்கு பிராய் சித்தம் தேடும் வகையிலும் இந்த வழிபாடு நடத்தப்படுகிறது இந்த நிகழ்வானது ஆறு குளம் இருக்கும் இடங்களில் அமர்ந்து செய்வார்கள் இன்றைய நாட்களில் கோவில் அல்லது மண்டபங்களில் அல்லது வீடுகளில் பூணூல் மாற்றும் வழக்கமும் இருந்து வருகிறது இதன் முக்கிய நிகழ்வாக காமோகர் ஷீத் ஜபம் என்று சொல்லப்படுவது கடந்த ஆண்டுகளில் செய்த  அறியாமையால் செய்த செயல்களுக்கு பாவங்கள் போக்கக்கூடிய ஜபம் என்று  சொல்லப்படுகிறது. இந்த நாளையொட்டி கோவையில் பல்வேறு இடங்களில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது கோவை ராம் நகர் ஐயப்பன் பூஜை சங்கம் ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி கோவில் மற்றும் ஏனையகல்யாண மண்டபங்களில் இடங்களில் பூணூல் மற்றும் நிகழ்ச்சி நடந்தது இதில் ஏராளமான பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் புதிய பூணூலை அணிந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியை வேத பண்டிதர்கள் அவர்களுக்கு மந்திரம் சொல்லி ஜெபித்து அணிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !