உசிலம்பட்டி ராமர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
மதுரை; உசிலம்பட்டி அருகே ஸ்ரீ ராமர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது- ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட நோட்டம்பட்டி கிராமத்தில் பழமையான அருள்மிகு ஸ்ரீ ராமர் திருக்கோயில் அமைந்துள்ளது., இக்கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று 10 ஆண்டுகளுக்குப் பின்பு யாகசாலையில் முதல் கால பூஜை,இரண்டாம் கால பூஜை, கோமாதா பூஜை நடைபெற்று மங்கல இசை முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்., இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் புனித நீர் தெளிக்கப்பட்டது., தொடர்ந்து ஸ்ரீ ராமர் சாமிக்கு பால்,தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ராமர் காட்சியளித்தார். தொடர்ந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து ஸ்ரீ ராமரை வழிபட்டுச் சென்றனர்.