பெரும்புகை ஆலாத்தம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
செஞ்சி: பெரும்புகை ஆலாத்தம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தில் விநாயகர், பாலமுருகன் மாரியம்மன், கங்கையம்மன் ஆலாத்தம்மன் கோவில்களுக்கு திருப்பணிகள் செய்து ஜீரணத்தாரன மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் 26ம் தேதி காலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம், மகா கணபதி, மகாலட்சுமி, நவகிரக ஹோமம், தன பூஜையும், மாலை 6.00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் ஆகியன நடந்தது. இன்று காலை 7.00 மணிக்கு கோ பூஜை, பிம்பசுத்தி, நாடி சந்தானம், மூல மந்திர ஹோமும், 9.00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்படும் 9.35 மணிக்கு பாலமுருகன் கோவிலில் துவங்கி கருமாரியம்மன், கங்கையம்மன், விநாயகர் மற்றும் ஆலாத்தம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 10.30 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கினர்.