உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை விநாயகர், மாரியம்மன், மந்தை முனியாண்டி கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை விநாயகர், மாரியம்மன், மந்தை முனியாண்டி கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை: வடமதுரை அம்பலகாரன்பட்டியில் விநாயகர், மாரியம்மன், மந்தை முனியாண்டி கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. நேற்று மாலை கிராம தேவதைகளுக்கு கனி வைத்து தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் இன்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர்கள் ஜெகநாதன், சரவணக்குமார் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். பேரூராட்சி கவுன்சிலர் கணேசன், சுற்று வட்டார பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !