உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் சென்ற குழு; பத்திரமாக இருப்பதாக தகவல்

தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் சென்ற குழு; பத்திரமாக இருப்பதாக தகவல்

தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் சென்ற குழு சாகா எனும் இடத்தில் 148 பேரும் பத்திரமாக இருக்கிறார்கள்; அந்த குழுவில் ஒருவரான தேச மங்கையர்கரசி வீடியோ வெளியிட்டு உள்ளார். 


வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:  மானசரோவர் யாத்திரை செல்லும் வழியில் சாகா பகுதியில் உள்ளோம், போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது; நேபாளம், சீனா, இந்திய தூதரக அதிகாரிகளிடம் நாடு திரும்ப உதவி கேட்டுள்ளோம். அரசு ஒத்துழைப்பு வழங்கி பாதிக்கப்பட்டவர்கள் சீக்கிரமாக சரியான நிலைக்கு திரும்புவதற்கு இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறோம்; தாயகம் எல்லோரும் சீக்கிரமாக திரும்ப வேண்டும்.  எல்லாம் வல்ல சிவபெருமான் எங்களுக்கு துணை நிற்பார் என்ற நம்பிக்கையோடு உங்களிடம் இதை பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நமது நிருபர் 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !