உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயல்குடி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் புரவி எடுப்பு விழா

சாயல்குடி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் புரவி எடுப்பு விழா

சாயல்குடி: சாயல்குடி உள்ள சாஸ்தா சுயம்புலிங்க சுவாமி கோயிலில் ஆவணி மாத பொங்கல் விழா மற்றும் புரவி எடுப்பு விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று விளக்கு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். இன்று காலை நேர்த்திக்கடன் பக்தர்கள் சாயல்குடி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மூலவர் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று பூத்தட்டுக்களை ஏந்தியவாறு ஊர்வலம் வந்தனர். அலங்கரிக்கப்பட்ட குதிரை பொம்மை (புரவி) எடுத்து மேளதாளங்கள் முழங்க வந்தனர். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !