கோவை கொடிசியா இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :1 days ago
கோவை: கொடிசியா தொழில் காட்சி வளாகம் அருகே உள்ள இஸ்கான் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை துவங்குகிறது.
தமிழ்நாடு மேற்கு மண்டல இஸ்கான் செயலாளர் வினோத மகராஜ் கூறியதாவது: இந்த ஆண்டு இயக்கம் தொடங்கப்பட்டு 60வது ஜென்மாஷ்டமி 2026ல் கொண்டாடப்படுவது சிறப்பானது. இதையடுத்து, பள்ளி அளவில் பல போட்டிகள் நடத்தினோம். நாளை 1008 இடங்களில் இருந்து கொண்டு வந்த மஹா கலசாபிஷேக தீர்த்த அபிஷேகம் செய்யப்படுகிறது. பள்ளி குழந்தைகளின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இஸ்கான் கோயில் கட்டுமானம் 80 சதவீதம் முடிந்துள்ளது. திறப்பு விழாவை கோலாகலமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். செப்.4ல் நடக்கும் மஹா கலசாபிஷேகத்தில் அனைவரும் பங்கேற்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.