உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று ஆவணி கார்த்திகை விரதம்; பக்தியுடன் வேலவனை வழிபடுவோம்.. நலமும் வளமும் பெறுவோம்!

இன்று ஆவணி கார்த்திகை விரதம்; பக்தியுடன் வேலவனை வழிபடுவோம்.. நலமும் வளமும் பெறுவோம்!

கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும்.  இது முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பித்து, நன்றி செலுத்தும் வழிபாடாகும்.. குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம்.


பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்துதான் நாரதர், சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார். மகாபலிச் சக்கரவர்த்தி, திருக்கார்த்திகை விரதமிருந்தே தனது உடலின் வெப்பத்தைத் தணித்துக் கொண்டான். திரிசங்குவும், பகீரதனும் கார்த்திகை விரதமிருந்தே பேரரசர் ஆனார்கள். மகிஷனை வதம் செய்ததால் ஏற்பட்ட பாவம் நீங்க, பார்வதியாள் திருக்கார்த்திகை விரதம் இருந்ததாகச் சொல்கிறது புராணம். கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. இந்த நாளில் பக்தியுடன் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். வீட்டில் விளக்கேற்றி கந்தகுருகவசம் பாடி முருகப்பெருமானை வழிபடுதல் சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !