யோக மாயா லலிதாம்பிகை கோவிலில் மகா அபிஷேகம்
ADDED :4 hours ago
புதுச்சேரி: குருமாம்பேட் யோக மாயா லலிதாம்பிகை கோவிலில் நடந்த, மகா அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
குருமாம்பேட் பகுதியில் யோக மாயா லலிதாம்பிகை கோவில் உள்ளது. தேய்பிறை பஞ்சாமியை முன்னிட்டு, வராஹி அம்பாளுக்கு நேற்று முன்தினம் மாலை மகா அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.