ஸ்ரீ சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா துவக்கம்
அனுப்பர்பாளையம்: திருப்பூர், பி.என்.ரோடு, அண்ணா நகர் மேற்கு, தியாகி குமரன் காலனியில் உள்ள சுடலை மகாராஜா கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கரை சுடலைமாடசாமி, ஸ்ரீ முண்டசுவாமி, ஸ்ரீ ராஜகாளியம்மன், ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோவில்களின் 20-ம் ஆண்டு பொங்கல் விழா, நாளை, (5-ம் தேதி) துவங்குகிறது.
விழாவையொட்டி, 5-ம் தேதி காலை மகா கணபதி ஹோமம், கலச பூஜை, இரவு அன்னதானம் நடைபெறுகிறது. 6-ம் தேதி குருதி பூஜை, பொங்கல் வைத்தல் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. 7-ம் தேதி முளைப்பாலிகை ஊர்வலம், திருக்கம்பம் நடுதல் நடைபெறுகிறது. 8-ம் தேதி தீர்த்தக்குட ஊர்வலம், உச்சிகால பூஜை, கணியான் அழைப்பு, சுவாமிகளுக்கு அலங்கார பூஜை, மாசான சுடலை ஈஸ்வர் மயான வேட்டை மற்றும் சுடுநீரில் குளித்தல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 9-ம் தேதி மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல், உச்சிபூஜை மற்றும் கம்பம் கங்கையில் சேர்த்தல் நடைபெறுகிறது. 10-ம் தேதி அம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.