உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் விழிதிநாத சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்

காரைக்கால் விழிதிநாத சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்

காரைக்கால்: காரைக்காலில் விழிதிநாத சுவாமி ஸ்ரீ ப்ரசன்ன மகா கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் நடந்தது.


காரைக்கால் நிரவி விழிதியூர் பகுதியில் உள்ள விமலாம்பிகா சமேத ஸ்ரீ விழிதிநாத சுவாமி ஸ்ரீ ப்ரசன்ன மகா கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 1ம் தேதி விக்னேஷ் பூஜையுடன் துவங்கியது. 4ம் தேதி கணபதி ஹோமம். நவக்கிரஹ ஹோமத்துடன் துவங்கியது. இன்று நான்காம் கால பூஜை முடிந்து புனித நீர்களை கொண்ட கலசத்தை கோவில் ஆலயத்தை சுற்றி வந்து அனைத்து விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் தொகுதி எம்.எல்.ஏ. மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !