சதுர்த்தி விழா; காமதேனு வாகனத்தில் உப்பூர் விநாயகர் வீதி உலா
ADDED :13 hours ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின் ஏழாம் நாளில், காமதேனு வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் முக்கிய விதிகள் வழியாக, வீதி உலா வந்த விநாயகருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். பெண்கள் தெருக்களில் மாக்கோலம் இட்டு வரவேற்றனர். செப்.14 நாளை முக்கிய விழாவான சதுர்த்தி தீர்த்தவாரி நடக்கிறது.