உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை

எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை

பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை நடந்தது.எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதம் வெள்ளிக்கிழமைகளிலும் ஊஞ்சல் சேவை நடக்கிறது. இதன்படி நேற்று முன்தினம் மாலை ஆவணி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் ஊஞ்சலில் அமர்ந்தனர். தொடர்ந்து தூப, தீப ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !