உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டாம் கால யாகசாலை பூஜை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டாம் கால யாகசாலை பூஜை

மதுரை: உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 16ஆம் தேதி பரிவார மூர்த்திகளுக்கும் 17ஆம் தேதி கோவில் கோபுரங்களுக்கும் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை முதலாம் காலையாக சாலை பூஜை நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை மங்கள இசை தொடர்ந்து காலை 8:30 மணிக்கு மேல் விசேஷ சந்தி,விக்னேஸ்வர பூஜை,புண்ணியாக வாசனம் உள்ளிட்டவைகளைத் தொடர்ந்து இரண்டாம் கால வேள்வி பொருளாதரி தீபாராதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து திருநீறு மற்றும் திருவமுது பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் யாக சாலை பூஜையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வரக்கூடிய நிலையில் மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து யாகசாலை பூஜைக்கு வருகை தந்து யாகசாலையை பார்த்து பக்தி பரவசம் அடைந்த நிலையில் அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்கி விட்டு செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !