உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ ராம நாம வங்கியின் கோடி ராம நாம கேந்திர பாதயாத்திரை

ஸ்ரீ ராம நாம வங்கியின் கோடி ராம நாம கேந்திர பாதயாத்திரை

கோவை; ஸ்ரீ ராம வங்கியின் கோடி ராம நாம கேந்திர பாதயாத்திரை கோவை நகர வீதிகளில் வெள்ளிகிழமையன்று  நடந்தது. இந்த பாத யாத்திரையின்  நோக்கம் ஸ்ரீ பகவர்நாம போதேந்திரர்  சுவாமியின் நாம சித்தாந்தத்தை கொண்டதும் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் வழியை மேற்கொள்வதும் ஆகும் கடந்த 32 ஆண்டுகளாக பக்தர்கள் சுமார் 14,000 கோடி ராம நாமங்களை சேகரித்து வைத்துள்ளனர். இந்த ராம நாமத்தை ஐந்து பாதையாத்திரைகள், 87 ரத யாத்திரைகள் என்று ஒரு லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து இந்தியா முழுவதும் 113 இடங்களில் பிரதிஷ்டை செய்து ஒரு கோடி  11 கோடி  100 கோடி  1000 கோடி என்று பலவிதமான நாம சாதனைகளை உருவாக்கியுள்ளது. 


இந்த ராம நாம வங்கியின் நோக்கமானது ஆன்மீகம் மற்றும் உலக நன்மைக்காக அனைவரும் ஒற்றுமையாக இருப்பதே இதன் நோக்கம் என்று ஸ்ரீ ராம நாம வங்கியின் பக்தர்கள் கூறினர் இதையொட்டி கோவையில்நடந்த பாதயாத்திரையில் பக்தர்கள் கலந்து கொண்டு காலை 08.30 மணிக்கு கணபதி பகுதியில்   இருந்து சிவானந்தாகாலனி சாய்பாபா காலனி வடவள்ளி ஆகிய பகுதிகள் வழியாக மருதமலை அடிவாரத்தில் இருக்கும் ஐ ஓ பி காலனி வரை இந்த பாதயாத்திரையில்ராம நாமத்தை சொல்லிக்கொண்டு சென்றனர்  இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ராம நாமத்தை ஜெபித்தபடி கோவை நகர வீதிகளில் வலம் வந்தனர் நிறைவாக ஐஓபி காலனி பகுதியில் இதன் நிகழ்வு நிறைவுற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !