PUBLISHED ON : ஆக 02, 2026

கனவு விதைக்கும் கல்வி ஆலயம்
நம்புவீர்களா... கியூ.ஆர்.,கோடு 'ஸ்கேன்' செய்து, காஞ்சிபுரம்
திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தைகளை
சேர்த்திடலாம்! ஆம்... இத்தொழில்நுட்ப முயற்சிக்காக, 2018ம் ஆண்டில் தமிழக
அரசின் 'புதுமை பள்ளி' விருது பெற்றது 1908ல் உதயமான இப்பள்ளி!
பள்ளி: வண்ணமிகு கட்டடங்கள், 14 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், கணினி ஆய்வகம், இணைய வழி தேர்வு, 'ஸ்மார்ட்' அடையாள அட்டை உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளுடன், 118வது ஆண்டில் ஜொலிக்கும் இப்பள்ளியின் ஆசிரிய பெருமக்கள், மாநில மற்றும் தேசிய விருதுகளால் இப்பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கின்றனர்!
பெருமை: 'நான் அ.தமிழரசி - முதல்வர்; நான் பி.நேசிகா - கலெக்டர்; நான் ச.சஜனா பாத்திமா - டாக்டர்; ச.லோமேஷ் - ஐ.பி.எஸ்., என, எங்கள் பெய ருடன் எங்களை துாங்கவிடா கனவை இணைத்துச் சொல்லி அன்றாடம் வருகைப் பதிவு செய்கிறோம். இருக்கையில் கனவுப்பதவி பொறித்த பெயர் பலகை தந்து எங்கள் கனவுக்கு நீர் வார்க்கிறது எங்கள் பள்ளி!'
3ம் வகுப்பு மாணவர்கள்
கோரிக்கை: 'மாணவ, மாணவியர் 378 பேரில் 281 பேர் ஆங்கில வழி கல்வி பயில்வதால் சிறப்பு ஆசிரியர்களின் தேவை இருக்கிறது. அதேபோல், 11 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 9 ஆசிரியர்கள் மட்டுமே இருக்கிறோம்; 'நுாற்றாண்டு விழா வளைவு, ஆக்கிரமிப்பில் இருக்கும் எங்கள் பள்ளி மைதானம் மீட்பு' உள்ளிட்டவையும் அரசிடம் எங்கள் கோரிக்கைகள்!'
ஆசிரியர் ஜி.செல்வகுமார்
