Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/அன்புள்ள மாமனிதர்

அன்புள்ள மாமனிதர்

அன்புள்ள மாமனிதர்


PUBLISHED ON : ஏப் 05, 2026

Follow on Google

PUBLISHED ON : ஏப் 05, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை மாநகரின் ஏதாவது ஒரு 'டிராபிக் சிக்னல்' அருகிலோ, சமூக வலைதள வீடியோக்களிலோ என்னை அறிந்தவர்களுக்கும், இதுவரை என்னை அறியாதவர்களுக்கும் வணக்கம்; என் பெயர் வெ.சு.சுரேஷ்குமார்

கடந்த 13 ஆண்டுகளாக தினசரி கா லை, மாலை வேளைகளில், 'டிராபிக் சிக்னல்' அருகில் நின்று சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றும்படி பேசுவதும், சமூக வலை தளங்களில் விழிப்புணர்வு தருவதும் என் வழக்கம்.

பயணங்களில் நான் உருவாக்கும் குப்பைகளுக்காக தனியாக ஒரு கைப்பை வைத்திருப்பது, உணவகத்தில் பார்சல் வாங்க வீட்டில் இருந்தே பாத்திரம் எடுத்துச் செல்வது, மளிகை பொருட்கள் வாங்க துணிப்பை கொண்டு போவது என, கல்லுாரி காலத்தில் இருந்தே என்னிடம் சில பழக்கங்கள் உண்டு! திருமணத்திற்குப் பிறகும் கூட என் குணம் மாறவில்லை.

55 வயது சுரேஷ் குமாரின் இன்றைய செயல்பாடுகளுள் சில...

* 'பிளாஸ்டிக் பாட்டி ல்' வைத்து இருப்பவர்களுக்கு 'ஸ்டெயி ன்லெஸ் ஸ்டீல்' பாட்டில் தருகிறார்

* 'பிளாஸ்டிக் பை'யில் பொருட்கள் வாங்கிச் செல்பவர்களிடம் 'துணிப்பை' நீட்டுகிறார்

* 'ரிப்ளக்டிங் ஸ்டிக்கர்' இல்லாத வாகனங்களை நிறுத்தி 'ஸ்டிக்கர்' ஒட்டுகிறார்

இப்படியான நானே, 2008ல் தலைக்கவசம் அணியாத பயணத்தில் காதில் ரத்தம் வழிய சரிந்தேன்; மூன்று நாட்கள் கழித்து கண் விழிக்கையில் மனைவி செல்வநாயகியும், மகள் திவ்யாவும் கண்ணீரோடு நின்றிருந்தனர். ஒருவார காலம் அவர்களுக்கு நரகமாய் கழிந்தது.

உடல்நலம் தேறியதும் எனக்கு கிடைத்த விழிப்பு ணர்வை மக்களுக்கு கடத்த நினைத்தேன். எனது 'கார் சேல்ஸ் கன்சல்டிங்' தொழிலை கவனித்துக் கொண்டே, 'சாலை பாதுகாப்பு' தொடர்பாய் விழிப்புணர்வு செய்தேன். 2013ம் ஆண்டு முதல் இக்கடமையி ல் தீவிரமாய் இயங்குகிறேன்.



'டிராபிக் சிக்னல்'களில் சுரேஷ்குமார் இப்படியாகப் பேசுகிறார்...


* 'ஏனுங்ணா... குடும்பத்து மேல அக்கறை இல்லீங்ளா... 'ஹெல்மெட்' போடாம போகலாங்ளா?

* 'உங்க அவசரத்துக்கோசரம் பக்கத்து வண்டியை இடிச்சு, அவங்க வாழ்க்கையை சிதைச்சுப் போடாதீங்ணா!

இப்படி நான் விழிப்புணர்வு செய்வதை சமூக வலைதளங் களில் பார்க்கும் சிலர், அவர்கள் ஊரிலும் நான் இதைச் செய்ய வேண்டுமென அழைக்கின்றனர். அவர் களிடம், 'இது நான் பயிற்சி எடுத்துச் செய்யும் 'மேஜிக் ஷோ' அல்ல; இதை நீங்களும் கூட செய்யலாம்' என்று அறிவுறுத்துகிறேன்.

என்னுடைய இக்குணம் முதுகலை பயிலும் என் மகளிடம் இருப்பினும், விழிப்புணர்வு பிரசாரத்திற்கு அவரை நான் அழைப்பதில்லை. 'மனதிற் கேற்ப செயல்படு' என்பது நான் அவருக்கு தந்திருக்கும் சுதந்திரம். சிவசக்தியிடம் பாரதி வேண்டிய, 'விசையுறு பந்தினைப் போல்' உடல் கேட்டிருக்கிறேன்; இயலும்வரை இக்கடமை செய்வேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us