தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா

மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா

மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா


PUBLISHED ON : ஆக 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மு.க.ஸ்டாலின் அறிந்த மார்ச் 25 நாடகம்

ஏது... டீ துாளே 10 ரூபாயா... சரி இருக்கட்டும்... நீ 10 ரூபாய்க்கு டீ போடு; அப்புறம் பென்னி...

வாடா ராஜிவ் காந்தி... உங்கப்பன் என்னடா இப்படி மங்குனி பயலா இருக்குறான்; என்னடா பார்க்குறே... நேத்து நைட்டு அவன்கிட்டே, 'மார்ச் 25, 1989 தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்ல, எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அவமானம் 'திட்டமிடப்பட்ட நாடகம்'ங்கிறது உனக்குத் தெரியுமா'ன்னு நான் கேட்டு முடிக்கலை...

சொன்னாய்ங்க... சொன்னாய்ங்க... நல்லா 'சலுப்பு'ன்னு எங்கப்பன்கிட்டே வாங்குன போல...

மனுஷப்பயலாடா அவன்; 'நடந்த சம்பவம் தி.மு.க., அரசை கவுக்குறதுக்காக திட்டமிடப் பட்ட நாடகம்'னு, அன்னைக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வா ஜெயலலிதாவுக்கு பக்கத்துல இருந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் சொன்னாருன்னும், அந்த நாடகத்துக்கு உடந்தையா இருந்ததை நினைச்சு அவர் வருத்தப்பட்டாருன்னும்...

இதெல்லாம் சட்டசபை அவைக்குறிப்புல பதிவாகி இருக்குன்னும் தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தல் பிரசாரத்துல சொன்னதை சொல்ல வந்தேன்டா... அதுக்குள்ளே அந்த பேப்பய என்னைய அடிச்சிட்டான்!

த்துா... அவன் ஒரு ஆளுன்னு அவன்கிட்டே போய் அடிபட்டு வந்திருக்கே பாரு... வெட்கம் இல்லாம! ஆமா... அதை எதுக்கு இப்போ அவன்கிட்டே நீ ஞாபகப்படுத்துனே?

அது வேற ஒண்ணுமில்லடா... இந்தா... இந்த வாரம் பட்ஜெட்டுக்காக நம்ம சட்டசபை கூடுதுல்ல; அப்போ இந்தமாதிரி நாடகம் நடக்குறதுக்கு ஏதும் வாய்ப்பிருக்கான்னு உங்கப்பன்கிட்டே அரசியல் பேச ஆரம்பிச்சேனா...

ஏன் பென்னி... எங்கப்பன் நேருவுக்கு என்ன தெரியும்னு அவன்கிட்டே அரசியல் பேசப் போன நீ; கேளு... 'ஒரு சட்டையை மூணு நாளைக்கு பயன்படுத்துவாராம் அண்ணாதுரை'ன்னு நான் படிச்சதை சொல்லி, 'தலைவனுக்கான மிடுக்கு அவன் உடுப்புலேயா... அழகுலேயா... அறிவுலேயா'ன்னு நா ன் கேட்டதும் அவன் என்ன சொன்னான் தெரியுமா...

'டோப்பா வைச்ச மேக்கப் புல'ன்னான்; ஆனா இன்னைக்கு, அந்த முதல் புள்ளி வைச்சது யாருங்கிறதை மறந்துட்டு 'ஸ்டைல்' தரிசனம் பார்த்து அழுவுறான்; அவன்கிட்டே போய்... லுாசுப்பயடா நீ!


ஏது லுாசுப்பயலா... இங்க பாரு... எப்பவும் ஒரேமாதிரி இருக்க மாட்டேன்டா; இப்போ என் ' விசில்' எடுத்து ஒரு ஊது ஊதுனேன்னு வையி...

அடப்போடா... இப்படியே நீ ஜோக்கா அடிச்சுக்கிட்டு திரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us