தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!


PUBLISHED ON : செப் 06, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேரலை நாயகரே...

'மாண்புமிகு உறுப்பி னர் அமருங்கள்; மாண்புமிகு உறுப்பினரை எச்சரிக்கிறேன்; மாண்புமிகு அவை முன்னவர் பேசலாம்; மாண்புமிகு உறுப்பினர் கே.என்.நேரு அவர்கள்...' - இப்படியாக, சற்றும் அசராது அசத்தும் நம் 'மாண்புமிகு' சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அரசியல் பயில விரும்பும் தமிழக மக்களின் சில கேள்விகள்...

1. 'ஜனநாயகம் எனும் போர்வை போர்த்தி ஆடிய 'வாரிசு' அரசியல், 'மாற்றம்' விரும்பிய ஜனநாயகனால் ஒழிந்துவிட்ட சூழலில், 'ஜனநாயக' சட்டசபையில் 'மாண்புமிகு' அடைமொழி இத்தனை முறை உச்சரிக்கப்பட வேண்டுமா?

2. தங்கள் அனுபவத்தில் சொல்லுங்கள்... இக்கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் - இக்கூட் டத்தொடரை பயன் படுத்திக் கொண்ட அரசியல் முகங்கள்; இவ்விரண்டில் மக்கள் மனதில் எவை அழுத்தமாய் பதிந்திருக்கும்?

3. தி.மு.க., எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் இருக்கை மாறி அமர்ந்ததை பெரும் குற்றமாய் தாங்கள் கண்டித்து திருத்திய சம்பவம், சட்டசபையில் முதல்வர் தன் இருக்கை மாறி அமரும் நாட்களில் தங்கள் நினைவிற்கு வருகிறதா?

4. 'எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர், எதிர்க்கட்சி கொற டாவிடம் நீங்கள் அணுகும் முறைக்கும், நம் முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் நீங்கள் அணுகும் முறைக்கும் துளியும் பாரபட்சம் கிடையாது' என்கிறோம்; சரிதானே?

5. 'என்ன சொன்னால் எதி ரில் இருப்பவர்கள் கூச்சலிடுவர் என்றறிந்து அதையே மீண்டும் மீண்டும் சட்டசபையில் பேசுபவர்கள், மக்கள் நலனில் அக்கறையற்றவர்கள்' என்பது எங்கள் தீர்ப்பு; இதில் நீங்கள் முரண்படுகிறீர்களா?

6. 'தமிழக சட்டசபையில் நிகழ்வதை தமிழகம் இப்போதுதான் முழுமையாக பார்க்கிறது' எனும் சூழலில், 'தமிழக சட்டசபை காணாத மிகச்சிறந்த சபாநாய கர் நீங்கள்' எனும் 'அறிமுக' அரசியல்வாதிகளின் பாராட்டை ஏற்கிறீர்களா?

7. 'தடுமாறும் தமிழ் உச்சரிப்பு, ஒழுங்கீன செயல்பாடு, துறைசார் அறிவு போதாமை, தொடர்ந்து சட்டசபைக்கு வர இயலாமை' - இவற்றில் எது, 'நேரலை அவசியமா' எனும் கேள்வி எதிர் காலத்தில் எழும்ப முக்கிய காரணமாகும்?

7 ½ 'அறிவா, அறியாமையா' - 'மவுனம்' எதன் சாட்சி?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us