Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/நாங்க என்ன சொல்றோம்னா...: டியூடு

நாங்க என்ன சொல்றோம்னா...: டியூடு

நாங்க என்ன சொல்றோம்னா...: டியூடு


PUBLISHED ON : அக் 19, 2025

Follow on Google

PUBLISHED ON : அக் 19, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரதீப் ரங்கநாதனின் இந்த நான்காவது படம்தான்... கோமாளி !

மமிதாவை அறிமுகப்படுத்தும் காட்சியில், அவசியமே இல்லாமல் கேமரா லெப்ட் போய் ரைட் வரும் போதே படைப்பின் தரம் தெரிந்து விடுகிறது! ஆழமாய் சினிமா அறிந்தவர்களுக்கு, 'டைட்டில் கார்டு' பின்னணி காட்சிகளிலேயே டியூடின் அவலட்சணம் தெரிந்துவிடும்!

புனிதமான உணர்வை கையாள்வதாய் நினைத்து, 'சாக்கடை'க்கு 'காதல்' என்று பெயர் சூட்டும் விழா நடத்தி இருக்கிறார் இயக்குனர். எங்கேயோ ஆரம்பித்து, ஆணவக்கொலைக்கு எதிராய் பொங்குவதாக பொங்கல் வைத்திருக்கிறது படம்!

'பிரதீப் ரங்கநாதன்கிட்டே அவ்வளவுதான் போல' என எண்ணத் துாண்டும் அதே புளித்த நடிப்பு. 'இந்தாளு பைத்தியமா...' இல்ல... 'பைத்தியம் மாதிரி நடிக்கிறானா...' என பார்ப்போரை குழம்ப வைக்கும் பாத்திரத்தில் சரத்குமார்; நாட்டாமை... முழிச்சுக்கோ!

சரத்குமார் பாத்திரத்தின் மகளாக மமிதா பைஜு; பூத்ததற்கு பின்னும் பூத்துக்கொண்டே இருக்கும் அதிசய பூ! பிரதீப்பிடம் மமிதா தன் காதலைச் சொல்கையில்... விழி வழியே உயிர் தீண்டுகிறது காட்சியின் வசீகரம்; தனி ஒருவன் படத்திற்குப் பின் தமிழ் சினிமா பதிவு செய்த அழகிய வானவில் துண்டு இக்காட்சி!

'பூத்தது உணரும் முன் செடியில் இருந்து பூமிக்கு வந்துவிடும் மலரின் அழுகை இப்படித்தான் இருக்குமோ' என எண்ண வைக்கிறது காதல் தோல்வியில் உடையும் மமிதாவின் அழுகை!

'மமிதா எனும் இந்த ஒரே பூந்தியை வைத்து லட்டு பிடித்துவிட வேண்டும்' எனும் இயக்குனரின் பேராசை பெருநஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது நமக்கு!

மனைவியை அவள் காதலனோடு கணவன் அனுப்ப முயன்றால் அது... அந்த ஏழு நாட்கள் ; அனுப்பி விட்டால்... டியூடு .

ஆக.,

‛கறவை மாடு' கேட்டவருக்கு, ‛கணவரை கண்டுபிடித்து தருகிறேன்' எனச் சொன்ன காமெடியை மிஞ்சுகிறது படம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap