Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/டாக்டர்'ஸ் கார்னர்: பூனை யாருக்கு அலர்ஜி?

டாக்டர்'ஸ் கார்னர்: பூனை யாருக்கு அலர்ஜி?

டாக்டர்'ஸ் கார்னர்: பூனை யாருக்கு அலர்ஜி?


ADDED : மார் 02, 2024 10:07 AM

Follow on Google

ADDED : மார் 02, 2024 10:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பூனைக்கு ஆரம்பகால பராமரிப்பு அவசியமா? புதிதாக வளர்க்க துவங்குவோர் எவற்றில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?எஸ். ஐஸ்வர்யா, கோவை.

பூனை தனது உடல் எடையில், 40 சதவீத எடையிலான உணவு மட்டுமே ஒரு நாளைக்கு சாப்பிடும். ஒரு கிலோ அதன் எடையாக இருந்தால், 40 கிராம் உணவு தான் தினசரி சாப்பிட கொடுக்க வேண்டும். அசைவ உணவு அதிகம் கொடுப்பதன் மூலம் புரோட்டீன் சத்து கிடைக்கும்.

பூனைகளுக்கு முறையாக குடல்புழு நீக்கம் செய்வது, தடுப்பூசி போடுவது அவசியம். பிறந்து 45 நாட்களுக்கு பின் வைரஸ் தொற்றுக்கிருமி பரவாமல் தடுக்க, முதல் தடுப்பூசி போடப்படும். பின் 21 நாட்கள் கழித்து, பூஸ்டர் தடுப்பூசியும், 21 நாட்கள் இடைவெளியில் ரேபிஸ் தடுப்பூசியும் கட்டாயம் போட வேண்டும். நாய்கள் மட்டுமல்லாமல், பூனைகளுக்கும் ரேபிஸ் வைரஸ் தாக்கும்.

வீட்டிற்குள் குறிப்பிட்ட இடத்தில் மணல் கொட்டி, அதன் மீது, சிறுநீர் கழிக்க, பூனைகளை சிலர் பழக்கப்படுத்துகின்றனர். ஈரமான மணலில் நீண்ட நேரம் இருந்தால் அதன் அடிவயிறு பகுதியில், கருப்பாக பூஞ்சை தொற்று படர வாய்ப்புள்ளது. இதற்கு உடனே மருத்துவ சிகிச்சை எடுப்பது அவசியம். 'கேட் லிட்டர்' கடைகளில் கிடைப்பதால் அதிலும் சிறுநீர் கழிக்க பழக்கப்படுத்தலாம். பூனை காதுகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

தவிர, பூனைகளுக்கு உடல் முழுக்க முடி இருப்பதால் தினசரி இருமுறை சீவிவிட்டு, கொட்டும் முடிகளை அப்புறப்படுத்த வேண்டும். குழந்தை, முதியோர், ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவோருக்கு, இம்முடிகளால், சுவாச குழாய்களில் அழற்சி ஏற்படலாம்.-டி. யுகன்யா, கால்நடை மருத்துவர், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap