ADDED : ஜன 21, 2024 09:32 AM

நாய்கள், தமது மோப்ப சக்தியைப் பயன்படுத்தி, மற்ற நாய்களின் வயது, ஆணா - பெண்ணா, என்ன 'மூடில்' இருக்கின்றன. என்பதை கண்டுபிடித்துவிடும் தன்மை கொண்டவை. இதை அடிப்படையாக வைத்துத்தான் வெடிகுண்டு, போதைப்பொருளை கண்டுபிடிக்க பயிற்சி அளிக்கின்றனர்.
நாய்கள், தம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள மோப்ப சக்தியை பயன்படுத்துகின்றன. ஒன்று முதல் 2 கி.மீ., துாரம் வரை அவை மோப்ப சக்தியால் எளிதில் உணர்ந்து கொள்ளும். சில குறிப்பிட்ட சேர்மங்களுடைய நுண்ணிய பாகங்களைக்கூட நாய்களால் நுகர முடியும் என்று, அமெரிக்க ஆய்வக அறிக்கை கூறுகிறது. அபார மோப்ப சக்தி நாய்களுக்கு இருப்பதற்கு காரணம்...
நாய்களின் மூக்கு எப்போதும் ஈரப்பதத்தோடு இருப்பது. வாசனைத் துகள்களை அவற்றால் எளிதில் ஈர்த்துக்கொள்ள முடியும். நாயின் மூக்கில் 2 துவாரங்கள் உள்ளன. இரண்டுமே சுவாசிப்பதற்கு என்றாலும்... மோப்பம் பிடிக்கும் போது, காற்று மூக்கு துவாரங்கள் வழியாக வாசனை சுரப்பிகள் இருக்கும் பகுதிக்குப் போய் சேருகிறது. நாயின் தலையில் இருக்கும் 'வாசனையை நுகரும் பகுதியின்' அளவு, மனிதர்களைக் காட்டிலும் 50 மடங்கு அதிகம்.
மனு, நாய்களுக்கான சிறப்பு மருத்துவர்.

