ADDED : ஜன 21, 2024 10:14 AM

ஓட்டல் இன்டஸ்ட்ரீயில் புதுவரவு 'பெட்ஸ் கபே'. உணவுகளை ஆடர் செய்துவிட்டு, காத்திருக்கும் நேரத்தில் அங்குள்ள பெட்ஸ்களுடன் நேரத்தை செலவிடலாம். மும்பை, சென்னை நகரங்களை தொடர்ந்து கோவை, காளப்பட்டி ரோட்டில், 'பவ்பவ் பிலிஸ்' என்ற பெட்ஸ் கபே செயல்படுகிறது.
''வீடுகளில் குழந்தைகளுக்கு அடுத்தப்படியாக, ஸ்ட்ரெஸ் பஸ்ட்டராக இருப்பது செல்லபிராணிகள் தான். சொந்த வீடு இல்லாமல், பெட்ஸ் வளர்க்க முடியாமல் தவிப்போர், அவுட்டிங் செல்லும் போது ரிலாக்ஸாக இருக்க புது சூழலை தேடுபவர்களுக்காகவே, பவ்பவ் பிலிஸ் கான்செப்ட் உருவாக்கினோம். ஒரு பகுதியில் ரெஸ்டாரன்ட், மறுபகுதியில் துறுதுறு கண்களோடு, விளையாட வாடிக்கையாளர்களை அழைக்கும் பப்பிஸ். உணவை ஆடர் செய்து காத்திருக்கும் நேரத்தில், பெட்ஸ்களுடன் விளையாடலாம்,'' என்கிறார் ஓட்டல் நிறுவனர் அரவிந்த்.
மேலும் அவர் கூறுகையில்,'' எங்கள் ஓட்டலில், அனைத்து தென்னிந்திய, வடஇந்திய உணவு வகைகள் கிடைக்கும். இங்கே, காக்கஸ்பேனியல், கோல்டன் ரிட்ரைவர், ஹஸ்கி, சிட்சு, பீகில் உள்ளிட்ட பல வகை நாய்கள் உள்ளன. அனைத்து நாய்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், யாரையும் கடிக்காது. மதியம், மாலை நேரங்களில் ஓட்டல் செயல்படுகிறது,'' என்றார்.

