
பொங்கல் முடிஞ் சாலும் செங்கரும்பு தீரும் வரை சாப்பிடுவோம்ன்னு 'ஆரா'வும் 'ரெமோ'வும் போட்டி போடுறாங்க. யார் இந்த ஆரா, ரெமோ என கேட்கின்றீர்களா... வடவள்ளி பகுதியில் வசித்து வரும் சுபா என்பவரின் செல்ல நாய்கள் தான் இவைகள்.
வீட்டில் இவைகளின் சேட்டைகளை ஆர்வமாக உரிமையாளர் சுபா பகிர்ந்து கொண்டதாவது:ஆரா, ரெமோவின் பேவரட் புட் காய்கறிகளும், பழங்களும் தான். தெருவில் கரும்புகளை பார்த்து விட்டால், 'ஊ..ஊ..' என மெல்லிய சத்தத்துடன் வாங்கி தருமாறு கொஞ்சலுடன் கேட்பார்கள். கெஞ்சி, கொஞ்சி, இறுதியில் அடம்பிடித்து கரும்பு வாங்கிவிட்டார்கள். சின்ன சின்ன துண்டாக வெட்டி வைத்து, 50 கிராம் வரை கரும்பு கொடுக்கலாம். பொங்கல் முடியும் வரை கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்போம்.
இருவரும், ரசித்து, ருசித்து கரும்பு சாப்பிடுவதே, பேரழகாக இருக்கும். வெளியில் இருந்து, வீட்டிற்குள் வரும் போதெல்லாம், காய்ந்த பூ, பேப்பர் என ஏதோ ஒன்றை பரிசாக கொடுத்து, என்னை வரவேற்பது ஆராவின் ஸ்டைல். இவர்களுடன் இருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

