ADDED : ஜூலை 02, 2025 08:00 AM

'பஜாஜ் ஆட்டோ' நிறுவனம், அதன் 'சேத்தக் 2903' என்ற குறைந்த விலை மின்சார ஸ்கூட்டருக்கு பதிலாக, 'சேத்தக் 3001' என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, 1,500 ரூபாய் அதிகம்.
இந்த அறிமுகத்துடன், தற்போது அனைத்து மாடல் சேத்தக் ஸ்கூட்டர்களும், புதிய சேசிஸில் வடிவமைக்கப்படுகின்றன. இந்த ஸ்கூட்டரில், 3 கி.வாட்.ஹார்., ஆற்றல் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது.
ஒரு சார்ஜில், 127 கி.மீ., வரை பயணிக்கலாம். இதன் அதிகபட்ச வேகம், 63 கி.மீ.,ராக உள்ளது. இம்முறை, கூடுதல் சார்ஜிங் வேகம் கொண்ட 750 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்ய, 3 மணி நேரம் 50 நிமிடம் வரை எடுத்துக் கொள்கிறது.
சேத்தக் 35 சீரீஸ் மாடலை போல, இந்த ஸ்கூட்டரும் 35 லிட்டர் பூட் ஸ்பேஸ் விருகிறது. இது, இரண்டாவது அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட மின்சார ஸ்கூட்டர் ஆகும். உலோகத்தால் ஆன வெளிப்புற வடிவமைப்பு, போன் இணைப்பு வசதிகள், எல்.சி.டி., டிஸ்ப்ளே, இரு ரைட் மோடுகள், இரு ட்ரம் பிரேக்குகள் ஆகியவை இதர அம்சங்கள் ஆகும்.
ஐந்து நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்கூட்டருக்கு, 'ஏத்தர் ரிஸ்டா எஸ், சுசூகி இ - ஆக்சஸ், ஓலா எஸ் - 1, டி.வி.எஸ்., ஐ - க்யூப்' ஆகிய மின் ஸ்கூட்டர்கள் போட்டியாக உள்ளன.