தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/மெர்சிடிஸ் பென்ஸ் 'வி - கிளாஸ்' எம்.பி.வி., நகரும் '5 - ஸ்டார்' ஹோட்டல்

மெர்சிடிஸ் பென்ஸ் 'வி - கிளாஸ்' எம்.பி.வி., நகரும் '5 - ஸ்டார்' ஹோட்டல்

மெர்சிடிஸ் பென்ஸ் 'வி - கிளாஸ்' எம்.பி.வி., நகரும் '5 - ஸ்டார்' ஹோட்டல்


UPDATED : மார் 04, 2026 08:01 AM

ADDED : மார் 04, 2026 07:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 04, 2026 08:01 AM ADDED : மார் 04, 2026 07:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், 'வி - கிளாஸ்' என்ற 6 - சீட்டர் சொகுசு எம்.பி.வி., காரை மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், முதல் முறையாக உள்நாட்டில் உற்பத்தியாகிறது. 5 லட்சம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

நீளம் 5.4 மீ., உள்ள இந்த கார், 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் வந்துள்ளது. ரியர் வீல் டிரைவ் அமைப்பு, 9 - ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோ கியர் பாக்ஸ் கிடைக்கிறது.

Image 1544218


இதில், கிரவுண்ட் கிளியரன்ஸை ஏற்றி இறக்க ஏர் சஸ்பென்ஷன், பின்புற பயணியருக்கு வென்ட்டிலேட்டட், மசாஜ் சொகுசு கேப்டன் சீட்கள், 10 யூ.எஸ்.பி., சி - டைப் சார்ஜிங் போர்ட், 12.3 அங்குல இரு டிஸ்ப்ளேக்கள், ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி, கேபின் குளிர்ச்சிக்கு வெப்ப பாதுகாப்பு, மல்ட்டி ஜோன் ஏ.சி., 15 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஏ.எம்.ஜி., வடிவமைப்பு, 18 அங்குல அலாய் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன.

பாதுகாப்புக்கு 7 - காற்று பைகள், 360 டிகிரி கேமரா, அடாஸ் லெவல் - 2, டிரைவர் கண்காணிப்பு கேமரா ஆகியவை கிடைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us