டி.வி.எஸ்., 'என்டார்க் 150' 'ஹைப்பர் ஸ்போர்ட்ஸ்' ஸ்கூட்டர்
டி.வி.எஸ்., 'என்டார்க் 150' 'ஹைப்பர் ஸ்போர்ட்ஸ்' ஸ்கூட்டர்
UPDATED : செப் 10, 2025 08:13 AM
ADDED : செப் 10, 2025 08:12 AM

'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனம், 'என்டார்க் 150' என்ற ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
காற்றை கிழிக்கும் வகையிலான 'விமான' டிசைன், எல்.இ.டி., ப்ரொஜக்டர் லைட்டுகள், 'டி' வடிவ டெயில் லைட்டுகள், 50க்கும் அதிகமான போன் இணைப்பு வசதிகள், 5 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, ஏ.பி.எஸ்., டிராக் ஷன் கன்ட்ரோல் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.
![]() |
இந்த ஸ்கூட்டரில், 149 சி.சி., ஏர், ஆயில் கூல்டு, இன்ஜின் பயன் படுத்தப்படுகிறது. 'என்டார்க் 125' ஸ்கூட்டரின் இன்ஜினை அடிப்படையாக கொண்டு, இந்த இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் வெளிப்புற மற்றும் உட்புற பாகங்கள், குறைந்த எடை பாலிமர் மற்றும் உலோகம் கலப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், இதன் எடை, என்டார்க் 125 ஸ்கூட்டரை விட, 1 கிலோ குறைவாக, 115 கிலோவில் உள்ளது.
கூடுதல் பிக்கப் வழங்க 'ஐ - கோ' அசிஸ்ட் வசதி, 'ஆட்டோ ஸ்டார்ட் ஸ்டாப்' வசதி, உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்படுகின்றன. மொத்தம் நான்கு நிறங்களில் வரும் இந்த ஸ்கூட்டர், 'ஸ்டாண்டர்ட்' மற்றும் 'டி.எப்.டி.,' என இரு மாடல்களில் வருகிறது.