யெஸ்டி அட்வெஞ்ச்சர் இறங்கும் 'வெயிட்', எகிறும் 'பெர்பார்மன்ஸ்'
யெஸ்டி அட்வெஞ்ச்சர் இறங்கும் 'வெயிட்', எகிறும் 'பெர்பார்மன்ஸ்'
ADDED : ஜூன் 11, 2025 09:00 AM

'கிளாசிக் லெஜென்ட்ஸ்' மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், அதன் 'யெஸ்டி அட்வெஞ்ச்சர்' பைக்கை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் முன்பதிவு துவங்கி உள்ளது.
இதில், 'ஆல்பா - 2' என்ற அதே 334 சி.சி., சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் மற்றும் 6 - ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன. நகர்ப்புற மற்றும் நெடுஞ்சாலை பயணங்களை மென்மையாக மேற்கொள்ள கியரிங் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இன்ஜின் சூட்டை தணிக்க சீரமைக்கப்பட்ட எக்ஸாஸ்ட், குறைந்த எடை இன்ஜின் 'பேஷ் பிளேட்', டேங்க் கார்டு ஆகியவை இந்த பைக்கின் எடையில் 5 கிலோ குறைத்து, 187 கிலோவில் வைக்கிறது.
'ட்வின் பாட்' எல்.இ.டி., ஹெட் லைட் மற்றும் டெயில் லைட்டுகள், டர்ட் பைக்கில் வரும் 'மட் கார்டு', 'ஸ்விட்ச்சபில்' டிராக் ஷன் கன்ட்ரோல், மூன்று ஏ.பி.எஸ்., மோடுகள், ப்ளூடூத் இணைப்பு வசதி, யூ.எஸ்.பி., 'சி - டைப்' சார்ஜிங், நேவிகேஷன் ஆகியவை புதிதாக வழங்கப்பட்டுள்ள அம்சங்கள். சீட் உயரம், 815 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 எம்.எம்., பெட்ரோல் டேங்க் 15.5 லிட்டராக உள்ளது.
இந்த பைக், ஆறு புதிய நிறங்களில் கிடைக்கிறது. நான்கு ஆண்டுகள் அல்லது 50,000 கி.மீ., வரை அடிப்படை உத்தரவாதம் வழங்கப்படுகிறது.