/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
காலத்துக்கு ஏற்ப வீட்டுக்கு தரை அமைக்கும் பணியில் கவனிக்க வேண்டியவை!
/
காலத்துக்கு ஏற்ப வீட்டுக்கு தரை அமைக்கும் பணியில் கவனிக்க வேண்டியவை!
காலத்துக்கு ஏற்ப வீட்டுக்கு தரை அமைக்கும் பணியில் கவனிக்க வேண்டியவை!
காலத்துக்கு ஏற்ப வீட்டுக்கு தரை அமைக்கும் பணியில் கவனிக்க வேண்டியவை!
ADDED : ஜூன் 13, 2025 11:41 PM

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டும் பணிகளில் ஈடுபடும் முன் அதன் ஒவ்வொரு பாகமும் எப்படி அமைய வேண்டும் என்பதை தெளிவாக திட்டமிட வேண்டும்.இதில் பெரும்பாலான மக்கள் துாண்கள், பீம்கள், மேல்தளம் போன்ற விஷயங்களை கவனித்தால் போதும் என்று நினைக்கின்றனர்.
ஒரு கட்டடம் உறுதியாக நிற்க வேண்டும், அடுத்தடுத்த தலைமுறையினர் அதை பயன்படுத்த வேண்டும் என்றால் உறுதி மற்றும் தரம் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீடுகளில் துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றுக்கு அப்பால், சுவர்கள் அதில் அடிக்கப்படும் வண்ணம் உள்ளிட்ட விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர்.
இதில் வீட்டுக்கு துாண்களை இணைக்கும் வகையிலான வெளிப்புற சுவர்கள் கட்டும்போது மட்டும் தரம் சார்ந்த விஷயங்களை பார்த்தால் போதாது. இத்துடன், உட்புற இணைப்பு சுவர், அதன் மேற்பூச்சு தரை போன்ற விஷயங்களில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, வீடுகளில் தரை அமைப்பதில் காலத்துக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன. இந்த மாற்றங்களை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் பல்வேறு பிரச்னைகளுக்கான ஆரம்ப புள்ளி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக, பிளிந்த் பீம் அமைத்து அதன் மேல் தரை மட்டம் வரையிலான சுவர் எழுப்பப்படுகிறது. இந்த சுவர் நிலத்துடன் இணைந்த நிலையில் இருக்கும் என்பதால், இதில் ஈரம் ஊடுருவ வாய்ப்புகள் அதிகமாக உள்ளதை மக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தரைமட்ட சுவர் அமைத்தபின் மண் கொட்டுவதற்கு முன், சுவரின் உட்புறமும்,வெளிப்புறமும் பூச்சு வேலை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், எதிர்காலத்தில், நிலத்தில் ஈரம் ஏற்பட்டால் அதை சமாளிக்க பேருதவியாக இருக்கும்.
இதன் பின் சுவர்களுக்கு இடைபட்ட பகுதியில், மண் கொட்டும் விஷயத்தில்,கட்டட கழிவுகளை தவிர்த்து, மலை மண், சரளை மண் ஆகியவற்றை கொட்டி நிரப்ப வேண்டும். இவ்வாறு மண் கொட்டும் போது, ஒரு அடிக்கு ஒரு முறை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
சுவரின் மேல் மட்டம் வரை மண் கொட்டும் பணிகளை முடித்த பின், பெரிய ஜல்லி, மணல், சிமென்ட் சார்ந்த கலவையை கொட்டி அழுத்த வேண்டும். இதன் மேல் சாதாரண சிமென்ட் தரை அமைக்க வேண்டும். இதில், பதிகற்கள் அமைக்கும் முன் தரையை வலுவாக்க வேண்டும்.
இதில் பொதுவான அணுகுமுறை என்ற அடிப்படையில், பதிகற்கள் தான் அமைக்க வேண்டும் என்பதல்ல. உங்களுக்கு வீட்டு தரை எப்படி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதன் அடிப்படையில் மேல் பகுதியை அமைக்கலாம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.