Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/ 'இயற்கையை பாதிக்காத கட்டுமானம் வேண்டும்'

'இயற்கையை பாதிக்காத கட்டுமானம் வேண்டும்'

'இயற்கையை பாதிக்காத கட்டுமானம் வேண்டும்'


ADDED : செப் 13, 2024 11:39 PM

Follow on Google

ADDED : செப் 13, 2024 11:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகம் உருவாகி படிப்படியாக நவீனம் அடைந்து, அனைத்து துறைகளும் அசுர வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் இயற்கையின் பேரிடர்களால் மிகப்பெரிய அழிவையும், அவ்வப்போது சந்திப்பதும் தவிர்க்க முடியாத ஒன்று.

நிலநடுக்கத்தால் மனிதகுலத்துக்கு மிகப்பெரிய ஆபத்தும், சவாலும் ஏற்படுத்துகிறது. பொறியியல் துறை நிலநடுக்கத்தை முன்னரே கண்டுபிடித்து, எச்சரிக்கையூட்டும் விஷயத்தில் எவ்வளது துாரம் முன்னேறியுள்ளது என்பது கேள்விக்குறியே.

நிலநடுக்கத்தால் சீர்குலையாத வகையில் கட்டுமானம் எழுப்புவதற்கு, என்ன விதமான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் நம் முன்னே இருக்கிறது.

பேரழிவுக்குப் பின், நாம் கற்றது என்ன, கடைபிடிப்பது என்ன; ஒன்றும் இல்லை. வழக்கம்போல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என, வேதனை தெரிவிக்கிறார் 'கொசினா' உறுப்பினர்.

'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ் கூறுகையில், ''மனிதர்கள் தோன்றுவதற்கு முன்னர் இருந்த, இயற்கை சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் எது செய்தாலும், அது ஆபத்தை விளைவிக்கும். மனித குலத்தின் அலட்சியத்தால், இதுவரை பூமி எவ்வளவோ மாசு அடைந்துவிட்டது.

சமீபகாலத்தில் பல சோக சம்பவங்களையும், சந்தித்துள்ளோம் என்பதை மறக்க முடியாது. இனியாவது மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்துவோம். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம். கழிவுகளை குறைப்போம்.

மரங்களை அதிகம் வளர்ப்போம். குறிப்பாக, பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிப்போம். வீட்டின் கொல்லைப்புறத்தில் 'ஆர்கானிக்' தோட்டம் அமைத்து பராமரிக்க வேண்டும்.

துணி போன்ற கழிவு பொருட்களை, மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒவ்வொருவரும் முக்கியத்துவம் தரவேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap