/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பது காலத்தின் கட்டாயம்
/
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பது காலத்தின் கட்டாயம்
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பது காலத்தின் கட்டாயம்
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பது காலத்தின் கட்டாயம்
ADDED : மே 23, 2025 11:52 PM

மழை நீரை நேரடியாக சேகரிப்பதும், பூமிக்குள் செலுத்துவதும் மழைநீர் சேகரிப்பு. இதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுக்க முடியும். இப்படிப்பட்ட மழைநீரை இரு வகைகளில் சேகரிக்கலாம் என்கிறார், 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.
அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது…
மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை, வடிகட்டி சேமித்து நேரடியாக குடிநீராக பயன்படுத்தலாம் மற்றும் உபரி நீரை நிலத்தடி நீராக சேமிக்கலாம். ரோடு, தெரு, வயல், திறந்த வெளிப்பகுதிகளில் பெய்யும் மழைநீரை நிலத்தடி நீராக சேமிக்கலாம்.
மொட்டை மாடியில் விழும் மழைநீரை, திறந்தவெளி கிணறுகள் வாயிலாகவும், ஆழ்குழாய் கிணறுகள் வாயிலாகவும் சேகரிக்கலாம். அதாவது, திறந்தவெளி கிணற்றில் மழைநீர் சேகரிப்பு என்பது சுலபமானது.
ஆண்டுக்கு ஒருமுறை கிணற்றை துார்வாரி, ஓரிரு வண்டி மணல் போட்டால் போதும்.அக்கம்பக்கத்தில் உள்ள, 10-15 வீடுகளில் கூரை மழைநீரைக்கூட ஒரே கிணற்றில் விடலாம். உதாரணமாக, 500 சதுரடி கூரை பரப்புள்ள, 20 ஆயிரம் வீடுகளில் ஓராண்டில் மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை முழுவதும் கிணற்றில் செலுத்தினாலே, பெரிய அணைக்கு சமம்.
வடிகட்டும் தொட்டி/குழி குறைந்தபட்சம், 2*2*2 என்ற அளவில் கட்டப்பட்டு, கீழ் பகுதியில் உடைந்த செங்கல் மற்றும் மேல் பகுதி மணலால் நிரப்பப்பட வேண்டும்.குழாய் வாயிலாக விழும் மழைநீரை குழாய்கள் மற்றும் வடிகட்டும் குழாய்கள் வாயிலாக குழாய் கிணற்றில் விட வேண்டும்.
வயல், திறந்தவெளியில் பெய்யும் மழைநீரை அப்படியே பூமியில் செலுத்தினால் அதிக பயன் கிடைக்கும். இதுபோன்ற நிலப்பரப்பில் சரியான மூலை பகுதியில், விஸ்தீரணத்திற்கு தக்கவாறு ஒரு பள்ளம் அமைத்து அல்லது தொட்டி கட்டி வரைபடத்தில் உள்ளவாறு, மழைநீரை நிலத்தடி நீராக சேமிக்கலாம்.
இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, ஆழ்குழாய் கிணற்றை 'கம்பிரஷர்' வாயிலாக சுத்தம் செய்ய வேண்டும். இக்குட்டையில் இறால், மீன் நுண் உயிர் தாவரங்கள் கூட வளர்க்கலாம். மழைநீரை, 0.9 மீ., அகலம் உள்ள குழி, பள்ளத்தில் விழச்செய்ய வேண்டும்.
தண்ணீரில் உள்ள வண்டல், குழியின் அடியில் படிந்து தெளிந்த நீர் மட்டும் அடுத்த உள்ள, 0.03 மீ., ஆழம் உள்ள மணல் நிரப்பப்பட்ட வடி தொட்டிக்கு செல்லும்.
மீதம் உள்ள நுண்ணிய வண்டல், மணல் மேற்பரப்பில் படிந்துள்ள தெளிவான நீர் மட்டும் மணலின் அடிப்பரப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள துவாரமிட்டு பிளாஸ்டிக் வளை சுற்றப்பட்ட பி.வி.சி., குழாய் வாயிலாக திறந்த வெளி கிணற்றில் சென்றுவிழும்.
வீட்டை சுற்றி திறந்தவெளி பகுதியில் தக்க இடைவெளியில் கசிவுநீர் குழிகள் அமைக்கலாம். 1 மீ.,* 1 மீ.,* 1.5 மீ., (ஆழம்) குழி தோண்டி, உடைந்த செங்கற்கள்/கூழாங்கற்கள் கொண்டு நிரப்ப வேண்டும்.
மணற்பாங்கான பகுதிக்கு ஏற்ப சுமார், 300 சதுரடி பரப்பிற்கு குழி அமைத்தும் நீரை சேமிக்கலாம்.இப்படி பல்வேறு வழிகளில் மழைநீரை சேமிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.