/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
வீட்டின் உட்புற சுவர்களுக்கு வண்ணங்கள் தேர்வில் வந்துள்ள மாற்றங்கள்!
/
வீட்டின் உட்புற சுவர்களுக்கு வண்ணங்கள் தேர்வில் வந்துள்ள மாற்றங்கள்!
வீட்டின் உட்புற சுவர்களுக்கு வண்ணங்கள் தேர்வில் வந்துள்ள மாற்றங்கள்!
வீட்டின் உட்புற சுவர்களுக்கு வண்ணங்கள் தேர்வில் வந்துள்ள மாற்றங்கள்!
ADDED : செப் 27, 2025 01:43 AM

சொந்தமாக வீடு கட்டுவதாக இருந்தாலும், அடுக்குமாடி திட்டத்தில் வாங்குவதாக இருந்தாலும் குறிப்பிட்ட சில விஷயங்களை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். இந்த வகையில் வீட்டின் பரப்ப ளவு, அறைகள் எண்ணிக் கைக்கு அப்பால், வீட்டின் உள் அலங்காரம் தொடர்பான விஷயங்களில் முடிவுகள் எடுப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஒரு கட்டடத்தின் உறுதி தன்மையை பாது காக்கும் ஆதார அமைப்பு களை காட்டிலும், அலங்கார விஷயங்களான பதிகற்கள் அமைத்தல், சுவர்களுக்கான வண்ணம் ஆகிய விஷயங்களில் முடிவு எடுக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டு கின்றனர். தரமான முறையில் கட்டுமான பணிகளை முடித்து விட்டோம் என்பதைவிட, அதில் மற்றவர்கள் வியக்கும் வகையில் வண்ணங்கள் அடிப்பது மிக முக்கியம்.
ஒரு காலத்தில் வீட்டு சுவர்களுக்கு வெள்ளை வண்ணம் மட்டுமே அடிக்கப்பட்டு வந்ததை நம்மில் பலரும் சிறு வயதில் பார்த்து இருக்கலாம். இன்றைய தலைமுறை யினருக்கு வண்ணங்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக கொட்டி கிடக்கின்றன.
இந்நிலையில், சுவர் களுக்கான வண்ணங்களை தேர்வு செய்ய மக்க ளுக்கு உதவும் வகையில் பெயின்ட் தயாரிப்பு நிறு வனங்கள் ஆயி ரக்கணக்கான ேஷட் களை உருவாக்கி உள்ளன. இந்த ேஷட்கள் தொடர்பான மாதிரிகள் அடங்கிய கையேடு கடைகளில் வழங்கப்படும்.
இது மட்டுமல்லாது, ஆன்லைன் முறையில் வீட்டு சுவர் களின் புகைப்படத்தை அப்லோடு செய்து, அதற்கு பொருத்தமான வண்ணங்களை தேர்வு செய்யும் வழிமுறைகளும் வந்துவிட்டன. இந்நிலையில், குறிப்பிட்ட சில வண்ணங்களில் தற்போதைய சூழலுக்கு ஏற்ற புதிய வகைகள் வந்துள்ளன.
உதாரணமாக, சிவப்பு என்பது அடிப்படை வண்ணமாக இருந்தாலும், அதில் அடர் சிவப்பு, வெளிர் சிவப்பு என்பதில் தற்போது, 50க்கும் மேற்பட்ட ேஷட்கள் வந்துள்ளன. குறிப்பாக, தினசரி பயன்படுத்தப்படும் உணவு பொருட்களை பார்ப் பவர்கள் அதை ஒட்டிய வண்ணங்களை தேர்வு செய்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட சுவரில் சிவப்பு வண்ணம் அடிக்க வேண்டும் என்று நினைப்பவருக்கு, தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வாயிலாக புதிய எண்ணம் ஏற்படுகிறது. குறிப்பாக தக்காளியை பார்க்கும் போது அதை போன்ற சிவப்பு வண்ணத்தில் சுவர் இருந்தால் என்ன என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.
இதே போன்று பிரவுன் வண்ணத்தை நினைப்பவர், சாக்லேட் சாப்பிடும் போது அதில் காணப்படும் பிரவுன் வண்ணம் சுவரில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.
குறிப்பாக, சாலைகளில் செல்லும் போது கண்ணில் படும் பொருட்கள், உணவு பொருட்கள், உடை போன்றவற்றில் காணப்படும் வண்ணங்கள் அடிப்படையில் சுவர் களுக்கு பெயின்ட்களை தேர்வு செய்யும் பழக்கம் தற்போது அதிகரித் துள்ளது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

