/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
'சின்ன வீடாக இருந்தாலும் பரவாயில்லை சிறு மாற்றங்களால் அழகாக மாற்றலாம்'
/
'சின்ன வீடாக இருந்தாலும் பரவாயில்லை சிறு மாற்றங்களால் அழகாக மாற்றலாம்'
'சின்ன வீடாக இருந்தாலும் பரவாயில்லை சிறு மாற்றங்களால் அழகாக மாற்றலாம்'
'சின்ன வீடாக இருந்தாலும் பரவாயில்லை சிறு மாற்றங்களால் அழகாக மாற்றலாம்'
ADDED : மே 23, 2025 11:49 PM

வீடு என்பது பார்த்து, ரசித்து கட்டப்படும் நீண்டகால கனவு. அதுவும் 'பட்ஜெட்'டிற்கு ஏற்ப இன்டீரியர் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுகின்றன. பெரிய பட்ஜெட்டில் வீடு கட்டமுடியவில்லை என்றாலும், சிறிய பட்ஜெட்டிலும் விரும்பிய வண்ணம் இல்லங்களை அமைக்கலாம்.
அதற்கு, மெருகேற்றும் விதமான சில மாற்றங்களை மேற்கொண்டால், அழகுடன்கூடிய ஆடம்பர வீடுகளை கட்டலாம் என்கிறார், கோவை மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க உறுப்பினர் தீபன் ராஜ்.
அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
வீடு என்பது ஒருவரின் மிகப்பெரிய கனவு. அதில் சிறு, சிறு மாற்றங்கள் கொண்டுவருவதன் வாயிலாக வீட்டை மிகவும் அழகாகவும், பிரமாண்டமாகவும் காட்டலாம். பொதுவாக அஸ்திவாரத்தின் உயரம் ரோடு மட்டத்திலிருந்து, 3 அடி உயரத்திற்கு உயர்த்தும் பொழுது, நமது வீடு பெரிய வீடாக தெரியும்.
உயரமான ஜன்னல்களை வைக்கும் பொழுது வீட்டினுள் காற்றோட்டமும், வெளிச்சமும் அதிகளவு கிடைக்கும். பொதுவாக சீலிங் உயரம், 10 அடி வைப்போம்; அதை, 11 அடியாக உயர்த்தினால், இன்னும் வீடு பிரமாண்டமாக காட்சி அளிக்கும்.
பால்ஸ் சீலிங் செய்யும் பொழுது, உயரம் நமக்கு தேவையான அளவு கிடைக்கும். வீட்டினுள் வரும் வெப்பமும் குறைக்கப்படும். பால்ஸ் சீலிங்கில் 'ஸ்பாட் லைட்'டுகள் பொருத்தும்போது மிதமான வெள்ளை லைட்கள் பயன்படுத்தினால், நமது கண்களுக்கு இனிமையாகவும், வீட்டினுள் அழகாகவும் இருக்கும்.
இந்த வகை 'ஸ்பாட் லைட்'களை அறை மட்டுமின்றி படுக்கை, டைனிங் பகுதிகளிலும் பயன்படுத்தலாம். எலிவேஷன்களில் சிறு சிறு புரஜெக்சன்கள் கொடுத்து அதில், லைட்டுக்கள் பொருத்தும்பொழுது, வீடு அழகாக தெரியும். பொருத்தும் லைட்டுகளை 'அப் டவுன்' முறையில் பொருத்தினால் இன்னும் வீட்டின் அழகை மெருகேற்றும்.
இவ்வாறு, அவர் கூறினார்.