
மதம் கலந்து திருமணம் பண்ணிக்க நானும், லீலாவோட அப்பா, அம்மாவும் அனுமதிக்க மாட்டோம்னு உறுதியா தெரிஞ்சிடுச்சு; அதனால...
'எனக்கு ஆண்மை இல்லாதது தெரிஞ்சும் லீலா என்னை ஏத்துக்கத் தயார்'னு என் பையன் சுந்தர பிரசாத் என்கிட்டே பொய் சொன்னான்; 'நான் கர்ப்பமா இருக்குறேன்' - இது, அவங்க வீட்டுல லீலா சொன்ன பொய்!
மருத்துவ பரிசோதனையில... லீலா கர்ப்பம் தரிக்கலைன்னும், 'கட்டி இருக்குற கர்ப்பப்பையை அகற்றணும்'ங்கிற விஷயமும், 'சுந்தருக்கு எந்த குறைபாடும் இல்லை'ங்கிற உண்மையும் தெரிய வந்தது. குடும்ப அந்தஸ்தை காரணம் காட்டி என் கணவரும், மாமியாரும் லீலாவை ஏத்துக்க மறுத்தாங்க!
'உங்க பேரனுக்கு ஆண்மை இல்லைன்னு சொன்னபோது லீலாவை ஏத்துக்கிட்டீங்களே... அது ஏன்; பிரச்னை உங்க தரப்புல இருந்தா கவுரவத்தை பெருசா நினைக்க மாட்டீங்க; அதுவே, எதிர்தரப்புல பிரச்னைன்னா அந்தஸ்து பற்றி பேசுவீங்க; குழந்தை பெத்துக்கிறது கட்டாயமா என்ன?
'நல்லா யோசிங்க... சுந்தரம் - லீலா சந்தோஷத்தை நிறைவேத்துறது முக்கியமா... இல்ல, ஒருத்தரோட விருப்பத்தை கொன்னுட்டு குடும்ப அந்தஸ்தை காப்பாத்துறது முக்கியமா?'
என்னோட இந்த கேள்வி 'எது முக்கியம்'னு என் குடும்பத்துக்கு புரிய வைச்சது; சுந்தர் சந்தோஷப்பட்டான்; அவன் அம்மா பத்மாவதியாகிய நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
படம்: அன்டே சுந்தரனிகி (தெலுங்கு)

