
'திருமணமாகி நான்கு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை'ங்கிறதை என் கணவர் சுஜித் அவமானமா நினைச்சார்; இந்த சூழல்ல...
பாலியல் வன்முறையால கர்ப்பம் தரிச்சேன்; விஷயத்தை அவர்கிட்டே சொல்லலை; எனக்குத் தெரியாம என் மருத்துவ அறிக்கையைப் பார்த்து சந்தோஷப்பட்ட அவர்கிட்டே, 'நடந்தது என்ன'ன்னு சொன்னேன்; சொல்லி முடிக்கிறப்போ, 'அந்த சம்பவம்' என்னை வெம்பி அழ வைச்சிருந்தது; தலைகுனிஞ்சிருந்தார் சுஜித்; தயக்கத்தோட அவர் கையை தொட்டேன்!
'ச்சீ... என்னைத் தொடாதே... தள்ளிப்போடி மானங்கெட்டவளே; எவனோ ஒருத்தனோட பிள்ளையை என் பிள்ளைன்னு நினைக்க வைச்சிட்டியேடி...'ன்னு மிருகத்தனமா கத்தினார். 'நான் போலீஸ்ல புகார் பண்ணப் போறேன்'னு அழுதப்போ, 'தேவிகா... முட்டாள்தனமா போலீஸூக்கெல்லாம் போயி, நடந்ததை எல்லாருக்கும் தெரியப்படுத்தாதே; அதெல்லாத்தையும் மறந்து கருவை கலைக்கிறதுதான் புத்திசாலித்தனம்'னு சமாதானம் பண்ணினார்!
ஆனா, நான் இன்னொரு பாதையை தேர்வு பண்ணினேன்; அதை சுஜித்கிட்டே சொன்னேன்...
'சில முடிவுகள்தான் நமக்குள்ளே இருக்குற பயத்தை போக்கும். அப்படி பயத்தை கொன்னுட்டு பிறக்கிற நம்பிக்கைதான் எதிர்மறை சமூகத்துல வாழ்றதுக்கான சக்தியை தரும். இது என் உறுதியான முடிவு சுஜித்... நான் கருவை கலைக்கப் போறதில்லை!'
என் முடிவு சரிதானே?
படம் : தி டீச்சர் (மலையாளம்)

