Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் மீண்டும் இயல்பாக வாழ முடியும்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் மீண்டும் இயல்பாக வாழ முடியும்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் மீண்டும் இயல்பாக வாழ முடியும்


PUBLISHED ON : நவ 30, 2025

Follow on Google

PUBLISHED ON : நவ 30, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஸ்ட்ரோக் ' அல்லது பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம். மூளை செல்கள் மற்றும் இணைப்புகள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் இறந்து கொண்டே இருக்கும். விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்கிறார், நரம்பியல் டாக்டர் செந்தில்குமார்.

பக்கவாதம் என்பது என்ன

பக்கவாத பாதிப்பு இரண்டு விதமாக ஏற்படலாம். ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதாலும், ரத்தக்குழாய் வெடித்து அதிலிருந்து ரத்தக் கசிவு மூளையில் பாதிப்பை ஏற்படுத்துவதாலும் உண்டாகிறது. பொதுவாக, ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுதான், அதிக பேருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது.

இப்பாதிப்பு யாருக்கெல்லாம் ஏற்படுகிறது?

பக்கவாதம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினருக்கும் ஏற்படலாம். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, அதிக கொழுப்பு, புகை மற்றும் மதுப்பழக்கம், போதை பழக்கம், உடல் பருமன், உடல் இயக்க குறைவு, துாக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை முக்கிய காரணங்கள். இவற்றை சரிசெய்தாலே, பாதிப்பை தடுக்கலாம்.

வயது முதிர்வு என்பது மாற்ற முடியாத காரணி. முதுமை காரணமாக ரத்த குழாயில் சுருக்கம் ஏற்படுவதால் பாதிக்கப்படலாம். மரபணு காரணமாகவும் வரலாம். இவ்விரண்டும் தவிர்க்க முடியாதது.

பக்கவாதத்தின் அறிகுறிகள் என்ன?

நடக்கும் போது தடுமாற்றம், ஒரு பக்கமாக இழுத்து நடப்பது,பார்வை திடீரென இரண்டாக தெரிவது, மங்கலாக அல்லது தெரியாமல் போவது, கை, கால்களை துாக்க முடியாமல் போவது, பேச முடியாமல் போவது அல்லது குழறுவது இதன் முக்கிய அறிகுறிகள். உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.

இப்பாதிப்பு ஏற்பட்டவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியுமா?

பக்கவாத பாதிப்புடன் வருபவர்களுக்கு, உடனடியாக மூளைக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து எந்த வகை பக்கவாதம் என உறுதி செய்து, அதற்கேற்ற சிகிச்சை துவங்கப்படுகிறது. சரியான நேரத்திற்கு மருத்துவமனை செல்ல வேண்டும் என்பது இதில் முக்கியம். இதனால், மூளையில் ஏற்படும் பாதிப்பின் அளவை குறைத்து, விரைவில் முழுமையாக குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இயலும்.

ஒரு முறை பாதிப்பு ஏற்பட்டால், மீண்டும் வர வாய்ப்பு உள்ளதா?

ஒரு சிலருக்கு முழுமையாக குணமடைந்த பின்னரும், மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு அளவுகளை சரியாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.



- டாக்டர் செந்தில்குமார்73393 33485

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap