Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/எலும்பு ஆரோக்கியத்தை சொல்லும் மதிப்பீட்டு மையம்!

எலும்பு ஆரோக்கியத்தை சொல்லும் மதிப்பீட்டு மையம்!

எலும்பு ஆரோக்கியத்தை சொல்லும் மதிப்பீட்டு மையம்!


PUBLISHED ON : மே 10, 2026

Follow on Google

PUBLISHED ON : மே 10, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வயதாகும் போது, எலும்புகளின் வலிமை படிப்படியாக குறைய ஆரம்பிக்கிறது; மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுகிறது; தசைகளின் அடர்த்தியும் மெதுவாக குறைகிறது. இதனால், தசை, எலும்புகளின் அமைப்பு மாறுகிறது.

வளைவுத் தன்மை குறைந்து, நடையில் 'பேலன்ஸ்' செய்வதில் சிரமம், தடுமாற்றம் ஏற்படுகிறது.

இம்மாற்றங்கள் எல்லாம் மிக மெதுவாக நடப்பதால், 'வயதானால் வரக்கூடிய இயல்பான மாற்றம் இது' என்று பெரும்பாலும் இதனை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆரம்ப நிலையில், கவனிக்காமல் விடுவதால், பல சமயங்களில், எலும்பு முறிவு, தீவிர ஆர்த்ரைடிஸ் போன்ற பிரச்னைகள் வந்து, செயல்படவே முடியாத நிலை ஏற்படுகிறது.

வலிமையற்ற எலும்புகள், பலவீனமான தசைகள், முழங்கால் மூட்டு முடக்குவாதம், முதுகுத் தண்டு சிதைவு, பேலன்ஸ் செய்ய தடுமாறுவது, விழுந்து விடுவோமோ என்கிற பயம், குற்ற உணர்வு என்று ஒரே நேரத்தில், பல்வேறு பிரச்னைகளுடன் முதியவர்கள் வருவர்.

வலியை குறைப்பதற்கான சிகிச்சை மட்டும் செய்தால், பல சமயங்களில், பிரச்னையின் மூல காரணம் தெரியாமலேயே போய்விடலாம்.

மதிப்பீட்டு மையம்

நோய் வந்த பின் சிகிச்சை என்பதைவிட, பிரச்னைக்கான அறிகுறிகளை ஆரம்ப நிலையி லேயே கண்டறிந்து, பிரச்னையே வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, முதியோர் எலும்பியல் மதிப்பீட்டு மையத்தின் நோக்கம்.

செயல்கள் செய்வதில், லேசான தடுமாற்றம் ஏற்படும் போதே, தசை, எலும்பின் அமைப்பு எப்படி உள்ளது, எந்த பகுதியில் பிரச்னை வர வாய்ப்புகள் உள்ளன என்பதை, ஒருங்கிணைந்த மருத்துவ முறையில் கண்டறிந்து, அதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளைச் சொல்கிறோம்.

இத்துடன், எந்த நிலையில் அமர்வது, நிற்பது, 'பேலன்ஸ்' எனப்படும் நிலைத்தன்மையுடன் இருப்பது போன்றவை பற்றியும் ஆலோசனை வழங்கப்படும்.

எக்ஸ்-ரே, ஸ்கேன் பரிசோதனை மட்டும் செய்து, எலும்பு, தசைகளின் நிலையை மதிப்பீடு செய்வதில்லை.

ஆரம்ப அறிகுறிகளின் அடிப்படையில், தேவையான பரிசோதனைகளை செய்வோம். இதில், வலியின் தன்மை, நடப்பதில் உள்ள சிரமம், தடுமாறி விழுந்த சந்தர்ப்பங்கள், மூட்டுகளில் இறுக்கம் உள்ளதா, எந்த நிலையில் அமரும் போது, எழுந்திருக்கும் போது அசவுகரியமாக உள்ளது உட்பட அனைத்தையும் தெளிவாக, தெரிந்து, வாழ்க்கை முறை மாற்றங்களை செய்யும் போது, தசை, எலும்பு, மூட்டு கோளாறுகள் தீவிரமடைவதை தடுக்கலாம்.

டாக்டர் கோபிநாத் துரைசாமி,

எலும்பியல் சேவைகள் இயக்குநர்,

பீ வெல் மருத்துவமனைகள் குழுமம்,சென்னை.

96983 00300

ask@bewellhospitals.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap