sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

ஆரோக்கியத்திற்கு ஆதாரம் கிராஸ் டிரைனிங்!

/

ஆரோக்கியத்திற்கு ஆதாரம் கிராஸ் டிரைனிங்!

ஆரோக்கியத்திற்கு ஆதாரம் கிராஸ் டிரைனிங்!

ஆரோக்கியத்திற்கு ஆதாரம் கிராஸ் டிரைனிங்!


PUBLISHED ON : ஜூலை 06, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 06, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினசரி 45 நிமிடங்கள் தவறாமல் ஒருவர் உடற்பயிற்சி செய்கிறார். ஒரு நாள் கனமான பையை சுமந்த படி நடந்தார். கைகளில் வலி. படிக்கட்டுகளில் ஏறினால் மூச்சு வாங்குகிறது. தினமும் முக்கால் மணி நேரம் சுறுசுறுப்பாக நடக்கும் எனக்கு, 20 படிகள் ஏறினால் ஏன் மூச்சு வாங்குகிறது என்று குழம்புகிறார்.

நீச்சல், நடை பயிற்சி, ஜாகிங், சைக்கிள் ஓட்டுவது போன்ற இதயத்தை வலுப்படுத்தும் பயிற்சிகள், தசைநார்களுக்கான 'ஸ்ட்ரென்தனிங்' பயிற்சிகள், மூட்டுகளின் வளைவுத்தன்மை தரும் பயிற்சிகள் என்று மூன்று விதமான உடற்பயிற்சிகள் பல காலமாக நடைமுறையில் இருக்கின்றன. ஆனால், நம் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப, இதில் ஏதோ ஒன்றை செய்வது தான் வழக்கம்.

நடைபயிற்சி மட்டும் செய்பவர்களுக்கு, எடை துாக்க முடிவதில்லை. தினமும் பளு துாக்குபவர்களால் சிறிது துாரம் நடந்தாலே மூட்டுகளில் வலி வருகிறது.

ஏன் சிமம் வருகிறது?

ஏதோ ஒரு உடற்பயிற்சியை தினமும் செய்பவர்களுக்கு புதிதாக ஒன்றை செய்யும் போது ஏன் சிரமம் வருகிறது என்று ஆராய்ந்ததில், ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று பயிற்சிகளை இணைத்து செய்தால் தான் பலன் இருக்கும் என்று தெரிந்தது. தசைகளின் வலிமை, இதய ஆரோக்கியம் இரண்டு பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் செய்வது தான் கிராஸ் டிரைனிங்.-

வயலில் நாற்று கட்டுகளை சுமந்து நடப்பதைப் போன்று, 'ஜிம்'மில் 'பார்மர்ஸ் வாக்' என்று செய்கிறோம். ஒரே நேரத்தில் இரு பயிற்சிகளை செய்யும் போது, இதயமும், தசைகளும் வலிமை பெறும்.

டென்னிஸ் விளையாடினால், இதயம், தசைகள், மூட்டுகள் என்று மூன்று வித பயிற்சிகளும் ஒரே நேரத்தில கிடைக்கும். கிரிக்கெட், தடகளம் என்று எந்த விளையாட்டாக இருந்தாலும் கிராஸ் டிரைனிங் பயிற்சி கட்டாயம் இருக்கும்.

இப்பயிற்சியை எல்லாரும் செய்யலாம். எவ்வளவு நேரம், எந்த அளவு செய்யலாம் என்பது நபருக்கு நபர் வேறுபடும். குழந்தைகளுக்கு ஓடுவது, குதிப்பது என்று பலவித பயிற்சிகளை ஒரே நேரத்தில் செய்ய வைப்பது அவசியம்.

மாரத்தான் ஓட்டம், டிரக்கிங் செல்பவர்கள், இப்பயிற்சியை ஒரு மாதம் முன்பிருந்தே செய்வது நல்லது. தினமும் நடைபயிற்சி, யோகா என்று ஏதோ ஒன்றை மட்டுமே இதுவரை செய்தவர்கள், பயிற்சியாளரிடம் சென்று முறையாக பயிற்சி பெற்ற பின், கிராஸ் டிரைனிங் செய்வதே பாதுகாப்பானது.



பிட்னஸ் விஜய்,

பிட்னெஸ் பயிற்சியாளர்,

ஸ்மார்ட் 7 வெல்னஸ், சென்னை

75500 26267


smart7wellness@gmail.com






      Dinamalar
      Follow us