Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/டாக்டரை கேளுங்கள்!

டாக்டரை கேளுங்கள்!

டாக்டரை கேளுங்கள்!


PUBLISHED ON : நவ 30, 2025

Follow on Google

PUBLISHED ON : நவ 30, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவிதா, மதுரை: ஹோமியோபதியில் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய்க்கு மருந்து உள்ளதா. அவற்றை எந்த முறையில் சாப்பிட வேண்டும்?



ஹோமியோபதியில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உயர் ரத்த கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகளுக்கு பக்கவிளைவுகளற்ற மருந்துகள் உள்ளன. பல ஆண்டுகளாக ஆங்கில மருந்து (அலோபதி) எடுத்துக்கொண்டவர்கள், ஹோமியோபதியில் சிகிச்சை பெற விரும்பினால் உடனே அந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தக்கூடாது. ஆங்கில மருந்தோடு சேர்த்து ஹோமியோபதி மருந்தையும் ஆரம்பிக்க வேண்டும். அடுத்தடுத்து வரும் மாதங்களில் டாக்டரின் ஆலோசனைப்படி ஆங்கில மருந்தின் வீரியத்தை குறைத்து உடல் நலம் தேறுவதற்கு ஏற்ப அதை நிறுத்தலாம்.

-டாக்டர் என்.ஆர்.ஏ.மதுமிதா, ஹோமியோபதி மருத்துவ நிபுணர், மதுரை



திருமூர்த்தி, ஒட்டன்சத்திரம்: எனக்கு வயது 35, உடல் பருமனாக இருப்பதால் கொழுப்புக் கல்லீரல் ஏற்பட வாய்ப்பு உள்ளதா. ஆரோக்கியமான வாழ்விற்கு ஆலோசனை கூறவும்?


உடல் பருமன் உள்ளவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் வரும் வாய்ப்பு அதிகம். உடலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது அது கல்லீரல் செல்களில் குவிந்து கொழுப்பு கல்லீரல் நோயை ஏற்படுத்தும்.

இதில் இரண்டு வகை. மது அருந்துவதால் ஏற்படுவது ஒரு வகை. இது ஆண்களுக்கு வருகிறது. மது அருந்தாதவர்களுக்கு ஏற்படுவது அடுத்த வகை. இது பெரும்பாலும் பெண்களுக்கு வருகிறது. இதற்கு அவர்கள் சாப்பிடும் அதீத சர்க்கரையும், கொழுப்பு மிகுந்த உணவு வகைகள் முக்கிய காரணங்கள். அதிலும் உடல் உழைப்பும் இல்லாமல் உடற்பயிற்சியும் செய்யாமல் அரிசி உணவையும் அதிக கொழுப்புள்ள உணவும் சாப்பிடுவது காலப்போக்கில் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் பிரச்னைக்கு விதை போடும். தம் வாழ்நாளில் ஒருமுறை கூட மதுவை தொடாதவருக்கு கொழுப்பு கல்லீரல் வருவது இப்படித்தான்.

உடல் எடையை பேண வேண்டும். நீரிழிவை கட்டுப் படுத்த வேண்டும். வறுத்த பொரித்த உணவுகள் அளவோடு இருக்கட்டும். அரிசி உணவு, மைதா கலந்த பேக்கரி பண்டங்கள், சிவப்பு இறைச்சி, துரித உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட, உடனடி உணவு, குளிர் பானங்கள் செயற்கை இனிப்பு வகைகளை குறைத்து கொள்ள வேண்டும். நொறுக்கு தீனிகளை ஓரங்கட்ட வேண்டும். சிறுதானிய, புரத உணவு வகைகளை அதிகப் படுத்த வேண்டும். கொழுப்பு உணவை மொத்தமாக ஒதுக்க வேண்டியதில்லை. இறைச்சிகளை குழம்பாக்கி சாப்பிடலாம். முட்டை சேர்க்கலாம். மீன் நல்லது. தினமும் ஒரு உடற்பயிற்சி அவசியம். உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க வேண்டும். இவ்வளவும் சரியாக இருந்தால் கொழுப்பு கல்லீரலுக்கு இடமில்லை.



டாக்டர் ஏ.ஆசைத்தம்பி, பொது நல சிறப்பு மருத்துவர், ஒட்டன்சத்திரம்


செந்தில்நாதன், பெரியகுளம்: எனது அண்ணன் சில நேரங்களில் தனியாக பேசுகிறார். கோபம் வந்தால் கையில் சிக்குவதை தூக்கி எறிகிறார். இதை எவ்வாறு சரி செய்வது?

இது துவக்க நிலையில் ஏற்பட்டுள்ள மனநோய். அடிக்கடி மது அருந்துபவர்களுக்கும், அதற்கு அடிமையானவர்களுக்கும் இந்த நோய் வர சாத்தியம் உள்ளது. இது மாதிரியான மன நிலை உள்ளவர்களிடம் குடும்ப உறுப்பினர்கள் அன்பு செலுத்த வேண்டும். தனியாக எங்கும் அனுப்ப வேண்டாம். அவருக்கு பிடித்த பாடல்களை அடிக்கடி கேட்க செய்யுங்கள். மது குடிக்க நினைக்கும் போது பிடித்த உணவுகளை சாப்பிடக் கொடுங்கள். இரவில் நன்றாக துாங்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதற்கு தன்னம்பிக்கை தரும் புத்தகங்களை தினமும் குறைந்தது 4 பக்கங்களை படிக்கச் சொல்லுங்கள். வற்புறுத்த வேண்டாம். ஒரு வாரம் கண்காணியுங்கள் மாற்றம் ஏற்படும்.

-டாக்டர் ஆர்.ராஜேஷ், மனநல மருத்துவர், மாவட்ட அரசு மருத்துவமனை, பெரியகுளம்

அ.கண்ணன், ராமநாதபுரம்: எனக்கு வயது 55, இதுவரை ரத்த தானம் வழங்கியதில்லை, ரத்தம் கொடுத்தால் ஏதேனும் உடல்நல பாதிப்பு ஏற்படுமா?

உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் மூன்று மாதத் திற்கு ஒரு முறை புதுப்பிக்கும். ரத்ததானம் செய்வதால் புதிய ரத்த சிவப்பணுக்கள் உடனே உற்பத்தியாகும். அதனால் 18 வயது முதல் 60 வயதுக் குள் இருப்பவர்கள் ரத்த தானம் செய்யலாம். ஆண்கள் ஆண்டுக்கு நான்கு முறையும், பெண்கள் மூன்று முறையும் ரத்த தானம் வழங்கலாம். ரத்ததானம் வழங்குவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய்வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதேபோல் ரத்தத்தில் கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும். ரத்த தானம் வழங்குவதற்கு முன்பு உடலில் உள்ள பிரச்னைகள் குறித்து டாக்டரிடம் தெரிவித்து ரத்தம் வழங்குவதற்கான தகுதியை தெரிந்து கொள்வது அவசியம்.

டாக்டர் எம். மணிமொழி, உதவி பேராசிரியர், குருதியேற்று துறை, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை

மா.மாரிமுத்து, சிவகங்கை: சர்க்கரை நோயால் கண்ணில் ஏற்படும் பாதிப்பு என்ன?

சர்க்கரை நோய் இருந்தால் அடிக்கடி கண்ணில் வலி உண்டாகும், கண் பட்டையில் கட்டிகள் ஏற்படும். கண்புரை உருவாகும். கண்ணில் அழுத்தம் அதிகரிக்கும். நரம்புகளை பாதிக்கும். ரத்த நாளங்களை சேதப்படுத்தும். விழித்திரையில் வீக்கம் ஏற்படும். இவற்றை தடுக்க உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டாக்டரின் பரிந்துரையில்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க வேண்டும். பெர்ரி, ஆப்பிள், கொய்யா, பேரிக்காய் உள்ளிட்ட நார்ச்சத்து உள்ள பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உலர்ந்த பழங்களான திராட்சை, பேரீச்சம்பழம், அதிக சர்க்கரை உள்ள பழங்களை தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த மாவுச்சத்து குறைவாக உள்ள உணவு ரத்த சர்க்கரை அளவைக் சுட்டுப்படுத்த உதவும்.

டாக்டர் வீனஸ்குமாரி, கண் மருத்துவ பிரிவு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை

குமரேசன், ஸ்ரீவில்லிபுத்துார்: எனக்கு 53 வயதாகிறது. 30 ஆண்டுகளாக மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்து வருவதால் பெரும்பாலும் ஓட்டல் உணவு தான் சாப்பிட்டு வருகிறேன். இந்நிலையில் தற்போது எனக்கு வயிறு, நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லை, உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனை இயற்கை உணவு முறையில் எப்படி சரி செய்வது?

ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் அஜினமோட்டோ, செயற்கை நிறமிகளால் வயிற்றுப் புண்கள் ஏற்படுகிறது. இதனை குணமாக்க மணத்தக்காளி கீரை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மதிய உணவில் மோர், நெய், வெண்பூசணி சேர்த்துக் கொள்ளவும். சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து சிறுதளவு வெந்நீர் குடிக்கவும். இதனால் வயிறு மந்தம் ஏற்படாது.

பாலுக்கு பதில் தேங்காய் பால் அருந்தினால் வயிற்றுப் புண்கள் குணமாகும். மாதுளை பழம் சாப்பிடவும். சீரகத் தண்ணீர் தினமும் அருந்தலாம். வாழைத் தண்டுடன் பாசிப்பயறு கூட்டு செய்து சாப்பிடலாம். சித்த மருத்துவத்தில் ஏலாதி சூரணம், சங்கு பற்பம் முதலிய மருந்துகளை டாக்டர்களின் ஆலோசனை யின் பேரில் எடுத்துக் கொள்ள வயிற்றுப் புண்கள் குணமாகும்.

-டாக்டர் சுந்தரராஜமன்னன், அரசு மருத்துவமனை, ஸ்ரீவில்லிபுத்துார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap