PUBLISHED ON : ஜன 14, 2024

காய்ந்த மக்காச்சோளத்தை சூடுபடுத்தும் போது, பொரிந்து 'பாப்கார்ன்' ஆகிறது. பாப்கார்ன் சாப்பிடலாமா என்றால், எப்படி தயாராகிறது என்பதை பொறுத்தது. வெளிநாடுகளில் 'டயாசெட்'டில் என்ற செயற்கையான வெண்ணெய் சேர்த்து தயாரித்தனர். இது, சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்பதால், அதை தவிர்த்து அப்படியே பொரித்து சாப்பிடுகின்றனர்.
நம் ஊரிலும் மால், தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்னில் அளவுக்கு அதிகமாக வெண்ணெய், உப்பு, மசாலா சேர்க்கின்றனர். இது நல்லதல்ல. பாக்கெட்டில் விற்கப்படுவதையும் தவிர்க்கலாம்.
காய்ந்த மக்காச்சோளத்தை வாங்கி, அப்படியே பொரித்து, வீட்டில் தயார் செய்யும் பாப்கார்னில் உள்ள 'பாலிபினால்' என்ற 'ஆன்டி ஆக்சிடென்ட்' ரத்த ஓட்டத்தை சீராக்கும். பெருங்குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் கரையாத நார்ச்சத்து பாப்கார்னில் அதிகம் உள்ளது.
கொழுப்பை கரைக்கும் தன்மை இதற்கு உள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சாப்பிடலாம். 100 கிராம் பாப்கார்னில் 11 கிராம் புரதச்சத்து உள்ளது; இன்சுலின் சுரப்பையும் துாண்டுவதால், சர்க்கரை நோயாளிகள் உப்பு, சர்க்கரை சேர்க்காமல் அப்படியே சாப்பிடலாம்.
டாக்டர் ஆர். மைதிலி,
ஆயுர்வேத மருத்துவர், சென்னை

