
போரின் கோர முகம் மக்களின் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான இன்னோரு அடையாள் சூாடான்.
சூடானில் ஏப்ரல் 2023 முதல் அந்நாட்டு ராணுவத்திற்கும் , 'ரெபிட் சப்போர்ட் ஃபோர்சஸ்' என்ற துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடுமையான உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. நாட்டின் தலைநகரான கார்ட்டூம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான வான்வழித் தாக்குதல்களும், வெடிகுண்டு வீச்சுகளும் நடந்தன.
போரின் போது உயிருக்கு பயந்து எங்கெங்கோ தற்காலிகமாக தஞ்சம் புகுந்தவர்கள் போர் ஒய்ந்திருக்கும் போது தங்களது இடங்களுக்கு திரும்பச் செல்லும் போது தவறுதலாக இதன் மீது மிதிக்கும் போதோ அல்லது ஏதேனும் இரும்புப் பொருள் என நினைத்து எடுக்கும் போதோ இவை பயங்கரமாக வெடித்து விடுகின்றன.
இத்தகைய வெடிக்காத குண்டு ஒன்றின் விபத்தில் சிக்கி தனது கை மற்றும் காலை இழந்து மாற்றுத்திறனாளியாக மாறியுள்ளார் 33 வயதே ஆன ஒமர் அல்-தும். சூடானில் நடந்து வரும் போரினால் 80 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன. இதனால் ஒமர் போன்ற குண்டுவெடிப்பில் காயமடைபவர்களுக்கு முறையான முதலுதவியோ, அறுவை சிகிச்சையோ அல்லது செயற்கை அவயவங்கள் பொருத்திக் கொள்ளும் வசதியோ கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது.இது சாமானிய மக்கள் சந்திக்கும் வாழ்நாள் துயரத்தைக் காட்டுகிறதுஇவரைப் போலவே ஜைனாப் என்ற சிறுமியும் முகமெல்லாம் குண்டுச் சிதறல்களை பாதிக்கப்பட்டு சிகிச்சை கிடைக்காமல் பரிதாப நிலையில் வாழ்க்கை மேற்கொண்டுள்ளார்.
தற்போதைய உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றான சூடான் உள்நாட்டுப் போரின் கொடூர முகத்தை வெளிப்படுத்துகிறது.
-எல்.முருகராஜ்
