Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/உயிரியல் உலகம்: ரீலா? ரியலா?

உயிரியல் உலகம்: ரீலா? ரியலா?

உயிரியல் உலகம்: ரீலா? ரியலா?


PUBLISHED ON : நவ 04, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்டீவியா, சர்க்கரைத் துளசி என்று அழைக்கப்படுகிறது.

உண்மை. ஸ்டீவியா (Stevia), சீனித்துளசி அல்லது சர்க்கரைத் துளசி என்று அழைக்கப்படுகிறது. இது இதன் இனிப்பு இலைக்காகப் பிரபலமாக உள்ளது. இந்தத் தாவரத்தை, பொதுவாக மிட்டாய் இலை (Candy leaf), இனிப்பு இலை, சர்க்கரை இலை எனவும் குறிப்பிடுகின்றனர். தாவரவியல் பெயர் ஸ்டீவியா ரெபாடியானா (Stevia Rebaudiana). சூரியகாந்தி குடும்பத்தின் ஒரு பிரிவான ஸ்டீவியா எனப்படும் தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும்.

2 - 3 அடி உயரம் வரையில் வளரக்கூடியது. பூக்கள் வெள்ளை நிறத்திலும், விதைகள் கறுமை நிறத்திலும் இருக்கும். பரந்த புல்வெளிகளிலும், மலைப்பகுதிகளிலும் நன்கு வளரக்கூடியது. தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.

பிரேசில், பராகுவே நாட்டைச் சேர்ந்த குவாரனி எனும் பூர்வக் குடிகளால் 1,500 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

சுவையூட்டும் பொருட்களின் ஆதாரமாக உள்ள இந்தத் தாவரம், பல்வேறு வர்த்தக பெயர்களில் விற்கப்படுகிறது. சர்க்கரைப் பதிலீடு பொருளாகப் பயன்படுகிறது.

பல்வேறு இனிப்பு பண்டங்கள் உற்பத்தி செய்ய, உதவும் ஸ்டீவியால் கிளைகோசைடு எனும் மூலப்பொருள், இவற்றின் இலையிலிருந்தே பெறப்படுகிறது.

மேலும், முக்கியமாக សំ (Stevioside), ரெபாடியோசைடு (Rebaudioside) G மூலப்பொருட்களும் இதிலிருந்தே கிடைக்கின்றன. சர்க்கரையின் இனிப்பு சுவையைவிடவும் 250 300 மடங்கு கூடுதலான இனிப்புச் சுவை இந்த இலைகளில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us