PUBLISHED ON : ஜூன் 23, 2025

நம் கணினிகளில் உள்ள கோப்புகள் (Files) பல வகையான தகவல்களை உள்ளடக்கியிருக்கலாம். ஒவ்வொரு கோப்பும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் (format) சேமிக்கப்படுகிறது. மேலும், அவை பொதுவாக ஒரு குறிப்பிட்ட பெயர் மற்றும் நீட்டிப்புடன் (file extension) அடையாளம் செய்யப்படுகின்றன. அருகே சில வித்தியாசமான நீட்டிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை எந்த வகை கோப்புகளைக் குறிக்கப் பயன்படுகின்றன எனக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.
விடைகள்:
1. விண்டோஸ் இயங்குதளத்தில் மென்பொருள் பயன்பாடுகளை இயக்குவதற்கு அல்லது நிறுவுவதற்குப் பயன்படுத்தப்படும் கோப்பு.
2. உயர் தர ஒலிகளைச் சேமிக்கப் பயன்படும் கோப்பு.
3. அசைவுப் படங்கள் அல்லது எளிய கிராஃபிக்ஸ் கொண்ட கோப்பு.
4. டிஜிட்டல் கேமராக்களில் இருந்து நேரடியாகப் பெறப்படும் பதப்படுத்தப்படாத (unprocessed) புகைப்படக் கோப்பு.
5. பல கோப்புகளை ஒரே கோப்பாகச் சுருக்கிச் (compress) சேமிக்கவும், பகிரவும் பயன்படுத்தப்படும் கோப்பு.
6. புகைப்பட எடிட்டிங் திட்டங்களை உள்ளடக்கிய கோப்பு.