Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/சரித்திரம் பழகு: தலைகீழாகத் தெரியும் கோபுர நிழல்

சரித்திரம் பழகு: தலைகீழாகத் தெரியும் கோபுர நிழல்

சரித்திரம் பழகு: தலைகீழாகத் தெரியும் கோபுர நிழல்


PUBLISHED ON : அக் 14, 2024

Follow on Google

PUBLISHED ON : அக் 14, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜயநகரப் பேரரசு கி.பி.1336இல் ஹரிஹரர், புக்கர் என்னும் இரண்டு சகோதரர்களால் தோற்றுவிக்கப்பட்டது. கி.பி. 1646 வரை, இந்தப் பரம்பரையில் வந்த அரசர்கள் தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஆட்சி செய்தனர். பேரரசின் தலைநகர் ஹம்பியாக இருந்தது. தென்னிந்தியாவில் கலைக்கோயில்களை எழுப்பியவர்கள் இந்த அரசர்கள். கோயில்களின் முன்வாசலில், பிரமாண்ட கோபுரங்களை எழுப்பியவர்களும் இவர்கள்தான்.

விஜய நகரத்தின் தலைநகரான ஹம்பி, போரில் அழிந்தது. அழிவுக்குப் பின்னும், அந்த நகரம் ஒரு வரலாற்றுக் கண்காட்சிச் சாலையாக விளங்குகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காணும் இடமெங்கும் மதிற்சுவர்கள், இடிபட்ட அரண்மனைகள், நீர்ப்பாசனக் கால்வாய்கள், சைவ, வைணவக் கோயில்கள், கோபுரங்கள், சிற்பங்கள், மன்னர்கள் மகுடம் சூடிய மண்டபங்கள் எனப் பேரரசின் மிச்சங்கள் இன்னும் இருப்பதால், அந்தக் கூற்று மெய்யானதாகவே தோன்றுகிறது.

படத்தில் இருப்பது, ஹம்பியில் உள்ள விருபாக் ஷா கோயில். இந்தக் கோயில் மண்டபத்தில்தான் கிருஷ்ணதேவராயர் முடி சூட்டிக்கொண்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன. கோயிலின் முன்வாசல் கோபுரத்தைக் கடந்து 200 அடிகள் முன்னோக்கிச் சென்றால், சற்றே மேடானப் பகுதியில், ஓர் அறை இருக்கிறது.

அந்த அறையின் சுவரில் சிறு துவாரம் உள்ளது. துவாரத்தின் வழியாகச் சூரிய ஒளி, உள்ளே இருக்கும் ஒரு சுவரில் பிரதிபலிக்கிறது. அது கோபுரத்தைத் தலைகீழாகக் காட்டுகிறது.

ஏழாம் நூற்றாண்டில் இருந்து இந்தக் கோயில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஹொய்சாளர், சாளுக்கியர், விஜயநகர அரசர்கள் எனப் பலரும் இந்தக் கோயிலை விரிவாக்கம் செய்துள்ளனர். எந்த மன்னரின் நுண்ணிய அறிவு இப்படி நிழலாகப் பிரதிபலிக்கிறது என்று தெரியவில்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap