PUBLISHED ON : ஜூலை 07, 2025

1. கர்நாடக சங்கீதத்தில் ராகங்கள் பல வகைப்படுகின்றன. இவை மேற்கத்திய கிளாஸிக்கல் இசையில் ________________ என அழைக்கப்படுகின்றன.
2. ஷட்ஜமம் (ச), ரிஷபம் (ரி), காந்தாரம் (க), மத்யமம் (ம), பஞ்சமம் (ப), தைவதம் (த), நிஷாதம் (நி) ஆகிய ஏழு ஸ்வரங்களில் அனைத்தையுமோ அல்லது சிலவற்றையோ கொண்டதே ஒரு ________________
3. இந்த ஏழு ஸ்வரங்களும் பல்வேறு நூற்றாண்டுகளில் ________________ சத்தங்கள், பலவித விலங்கு, பறவை ஒலிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
4. கர்நாடக சங்கீதத்தில் அனைத்து ராகங்களிலும் ________________ , ________________ ஆகிய ஸ்வரங்களே ஆதார ஸ்வரங்களாக விளங்குகின்றன. இவை இரண்டும் எப்போதும் மாறாது.
5. ரிஷபம் சுத்த ரிஷபம், ________________ ரிஷபம் என இரு வகைப்படும். காந்தாரம் சுத்த காந்தாரம், சாதாரண காந்தாரம், ________________ காந்தாரம் என மூன்று வகைப்படும். மத்யமம் சுத்த மத்யமம், பிரதி மத்யமம் என இரு வகைப்படும்.
6. தைவதம் சுத்த தைவதம், சதுஷ்ருதி தைவதம் என இரு வகைப்படும். நிஷாதம் சுத்த நிஷாதம், ________________ நிஷாதம், ________________ நிஷாதம் என மூன்று வகைப்படும்.
விடைகள்:
1. ஸ்கேல்
2. ராகம்
3. இயற்கை
4. ஷட்ஜமம், பஞ்சமம்
5. சதுஸ்ருதி, அந்தர
6. கைஷிகி, காகலி