PUBLISHED ON : ஜூலை 29, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
01. கர்நாடக சங்கீதத்துக்கு வித்திட்ட வேதநூல் எது?
அ. ரிக்,
ஆ. யஜுர்
இ. சாம
02. ஏழு ஸ்வரங்கள் எவற்றில் இருந்து பிறந்தவை?
அ. இயற்கை வளம்
ஆ. பறவை, விலங்குகளின் ஒலி
இ. நீர்நிலை
03. கர்நாடக சங்கீதத்தின் மூன்று அடிப்படை விஷயங்கள் எவை?
அ. ஸ்வரம், ராகம், தாளம்
ஆ. லயம், ராகம், ஸ்ருதி
இ. கமகம், லயம், ஸ்வரம்
04. கர்நாடக சங்கீதத்தின் தந்தை என்று அழைக்கப்படும் இசை மேதை?
அ. தியாகராஜர்
ஆ. புரந்தர தாசர்
இ. முத்துஸ்வாமி தீட்சிதர்
05. எந்த இந்திய மன்னரின் ஆட்சிக் காலத்தில் கர்நாடக சங்கீதம் வளர்ந்தது?
அ. பல்லவப் பேரரசு,
ஆ. சோழப் பேரரசு
இ. விஜயநகரப் பேரரசு
விடைகள்: 1) இ, 2) ஆ, 3) அ 4) ஆ, 5) இ

