PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM


மகா கும்பமேளா என்பது 12 வருடத்திற்கு ஒரு முறை வரும் மகா மகா கும்பமேளா என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அந்த வகையில் இந்த கும்பமேளா அத்தகைய சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த கும்பமேளாவில் கலந்து கொள்வதை பாக்கியமாக கருதி நாடு முழுவதும் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழக்கூடிய பக்தர்கள் பலரும் வந்து கலந்து கொண்டனர்.சென்னை அண்ணாநகரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் தாளளரான அசோக் கேடியா இந்த கும்பமேளாவிற்கு சென்று வந்தவராவார்.
அவர் ஒரு புகைப்படக்கலைஞரும் கூட இதனால் தனது லக்கேஜ் பெட்டியில் முதலில் எடுத்து வைத்துக் கொண்டது கேமராவைத்தான்.
இவர் தன் அனுபவங்களாக கூறியதாவது..
முன்கூட்டியே அறைகள் பதிவு செய்து கொண்டு விமானம் மூலமாக கும்பமேளா சென்று வந்தேன்,தற்காலிக டெண்ட் அடித்து அறைகள் ஏற்பாடு செய்திருந்தாலும் அதற்குள் தேவையான வசதிகள் செய்திருந்தனர்.உணவும் பிரச்னை இல்லை.ஆனால் எங்கே போனாலும் நடந்துதான் போகவேண்டும் உள்ளூர் இளைஞர்கள் தங்களது இரு சக்கர வாகனத்தில் நடக்கமுடியாதவர்களை ஆற்றின் கரைவரை அழைத்துச் சென்று வந்தனர், இதை வணிக ரீதியாக செய்தவர்களும் உண்டு.


-எல்.முருகராஜ்.

